மேட்சுக்கு இடையே இந்த மேட்டரை கவனிச்சீங்களா? சேப்பாக்கத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் செய்த சம்பவம்! ஆஹா
சென்னை : நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வியடைந்து வெளியேறியது ஒருபுறம் இருக்க, இன்னொரு விஷயம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது கிரிக்கெட் ரசிகர்கள் இரண்டு பேர் வைத்திருந்த பதாகை தான்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றியைப் பெற்று, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து 3 ரன் அவுட் விழுந்தது லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்று, லக்னோ அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.

ஏற்கனவே பிளே ஆஃப் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணி அணி நாளை மோதவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்திற்கு மத்தியில் கிரிக்கெட் ரசிகர்கள் இருவர் காட்டிய பதாகை பேசுபொருளாகி உள்ளது. ஆட்டத்திற்கு இடையே சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் இருவர் ஆளுக்கொரு பதாகையை ஏந்தியபடி போஸ் கொடுத்தனர்.
அவர்கள் ஏந்தியிருந்த பதாகையில் ஒன்றில் "CSK-னா தல" என்று சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி படத்துடனும், மற்றொன்றில் "Tamilnadu-னா மல" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்துடனும் இருந்தது.
மும்பை - லக்னோ ஆட்டத்திற்கு இடையே அவர்கள் இந்த பதாகைகளை ஏந்தியவாறு போஸ் கொடுத்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றன.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications