Poonamalle metro: பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி!எங்கெங்கு நிற்கும்?
சென்னை: சென்னை மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த சேவை தொடங்கினாலும் போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) Phase-2 திட்டத்தின் Corridor 4 (மஞ்சள் நிற வழித்தடம்) இன் முதல் இயங்கும் பகுதியான இந்த 15.8 கி.மீ. நீளமான பிரிவுக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அதிகாரி கடந்த சில நாட்களாக (பிப்ரவரி 23 முதல் 26 வரை) தீவிர ஆய்வு மேற்கொண்டார். இதில் ஸ்பீட் டிரையல்கள் நடத்தப்பட்டன - பூந்தமல்லி முதல் போரூர் வரை 90 கி.மீ./மணி வேகத்திலும், போரூர் முதல் வடபழனி வரை 40 கி.மீ./மணி வேகத்திலும் ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டன.
பேக்-அப் ஆபரேஷன்ஸ் கண்ட்ரோல் சென்டர் (நந்தனம்), சிக்னலிங் சிஸ்டம், டிராக், ஸ்டேஷன்கள், எமர்ஜென்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததால் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. ரயில்வே துறை இறுதி அங்கீகாரம் அளித்து பயணிகள் சேவை தொடங்க அனுமதி கொடுத்துள்ளது. இது இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
சில ஆதாரங்களின்படி மார்ச் 2026 முதல் வாரத்தில் பயணிகள் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. முந்தைய இலக்கு பிப்ரவரி இறுதி என்றாலும், ஆய்வு முடிந்து அனுமதி கிடைத்துள்ள நிலையில் பூந்தமல்லி- வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரிவில் 11 நிலையங்கள் உள்ளன - பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முள்ளைத்தோட்டம், காரையன்சாவடி, குமனஞ்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெல்லியாரகரம், போரூர் பைபாஸ், போரூர் ஜங்ஷன், வடபழனி. இது ஆளில்லா (Driverless) மெட்ரோ ரயிலாக இயங்கும்.
தொடக்கத்தில் 10 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சில நிலையங்கள் (போரூர் ஜங்ஷன் முதல் சாலிகிராமம் வரை சில) சிவில் வேலைகள் முடியாததால் படிப்படியாக திறக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்தும் முழுமை பெறும்.
முழு Phase-2 திட்டம் 118.9 கி.மீ. நீளமானது (3 வழித்தடங்கள்). இந்த பிரிவு முதல் இயங்கும் பகுதியாக இருப்பதால், சென்னையின் மேற்கு பகுதி (போரூர், ஐயப்பந்தாங்கல், பூந்தமல்லி) போக்குவரத்து நெரிசல் குறையும். Phase-1 உடன் இணைந்து வடபழனியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு எளிதாக செல்லலாம்.
மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முக்கிய வழித்தடமாக இருப்பது போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டமாகும்.
சென்னையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஒரே வீட்டில் 2, 3 கார்கள், 4, 5 பைக்குகள் இருக்கின்றன. இவையெல்லாம் சாலைகளில் பீக் ஹவர்ஸில் பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதற்காகவே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம், கிண்டி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம் என முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் வேகமெடுத்து வருகின்றன. தற்போது பூந்தமல்லி- வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயங்க அனுமதியும் கிடைத்தாகிவிட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications