உதயநிதியை பாராட்டிய ஏஆர் ரஹ்மான்.. "வாவ்.. இந்தியாவில் முதல் முறை" என ஒரே புகழ்ச்சி! மேட்டர் இதுதான்
சென்னை: சென்னையில் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்த உள்ளது. இந்நிலையில் தான் ‛‛சென்னையில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாட்டிலேயே இதுபோன்ற ஒரு போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த அசாதாரண கார் பந்தயத்தை சென்னையில் கொண்டு வந்து இந்தியர்களுக்கு உற்சாகமளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்'' என இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பாராட்டி உள்ளார்.
இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இதுவரை இந்த போட்டி என்பது நம் நாட்டின் எந்த நகரிலும் நடைபெறவில்லை. சென்னையில் இந்த போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்த உள்ளது.

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முயற்சியில் இந்த போட்டி என்பது சென்னையில் நடைபறெ உள்ளது. இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் நாளை (ஆகஸ்ட் 31) மற்றும் செப்டம்பர் 1 என 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த போட்டி என்பது சென்னை அண்ணா சாலை வழியாக நடைபெற உள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் சென்னை தீவுத் திடலில் போட்டி தொடங்கும். அங்கிருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள இடங்களை இணைத்து 3.5 கிலோமீட்டர் சர்க்யூட்டில் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை, நாளை மறுநாள் நடக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக போட்டி நடக்கும் இடங்களை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்த போட்டியை நடத்த அதிமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்நிலையில் தான் எதிர்ப்புகளை தாண்டி ஃபார்முலா 4 கார் பந்தயம் நாளை நடைபெற உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெற உள்ளது தொடர்பாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாட்டிலேயே இதுபோன்ற ஒரு போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த அசாதாரண கார் பந்தயத்தை சென்னையில் கொண்டு வந்து இந்தியர்களுக்கு உற்சாகமளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்'' என கூறியுள்ளார்.
அதேபோல் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர். திரைத்துறையை எடுத்து கொண்டால் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்பட பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் ஏஆர் ரஹ்மானும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக ஃபார்முலா கார் பந்தயத்தின் தீம் பாடல் வெளியானது. இந்த பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications