சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ்ல கானா பாடுனா "சீப்பா" நினைப்பீங்க.. மெட்ரோ ரயில்ல கித்தார் வச்சு பாடுனா கெத்தா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு சிலர் ஏஆர் ரகுமான் பாடலை பாடி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ள நிலையில், மறுபுறம் இது தொடர்பான எதிர்ப்பு ட்வீட்களும் இணையத்தில் அதிகமாகவே பார்க்க முடிகிறது.

Recommended Video

    சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு சிலர் ஏஆர் ரகுமான் பாடலை பாடும் வீடியோ

    வெளிநாடுகளில் பொது இடங்களில் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடுவது என்பது இயல்பான ஒன்று. அதைச் சுற்றியிருப்பவர்கள் ரசிக்கவே செய்வார்கள்!

    ஆனால், நம் நாட்டில் மட்டும் பேருந்துகளிலும், ரயில்களிலும் இளைஞர்கள் கானா பாடல்களைப் பாடும் போது, அது ஒரு சிலருக்கு nuisance ஆகிவிடுகிறது.

    ஜனவரி 19, மார்ச் 21 திருப்புதல் தேர்வுகள்: 10,12 தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளி கல்வித்துறைஜனவரி 19, மார்ச் 21 திருப்புதல் தேர்வுகள்: 10,12 தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

     வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    இந்நிலையில் மெட்ரோ ரயில்களில் இளைஞர்கள் சிலர் ஏஆர் ரகுமான் பாடல்களை அட்டகாசமாகப் பாடி வெளியிட்டுள்ள வீடியோக்கள் தான் இணையத்தை நேற்று முதல் வைரலாகி வருகிறது. ஒரு இளைஞர் கலக்கலாகக் கிட்டார் வாசிக்க, மற்றொருவர் அதற்கு இணையாக cajon டிரம்ஸ் வாசிக்க அந்த இடம் முழுவதும் மகிழ்ச்சியில் நிரம்பியுள்ளது.

     ஏஆர் ரகுமான் பாடல்

    ஏஆர் ரகுமான் பாடல்

    இவர்கள் அருகில் அமர்த்திருந்த பலரும் இதை மகிழ்ச்சியாக ரசித்தனர். ஏர்ஆர் ரகுமானின் 'ஆத்தங்கரை மரமே' பாடலை பாட, உடனே அங்கிருந்த அனைவரும் இவர்களுடன் இணைந்து ஒன்றாக அந்த பாடலை பாடினர். இதை அங்கிருந்த பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். இந்த வீடியோக்கள் தான் இணையத்தில் நேற்று முதல் தீயாகப் பரவி வருகிறது.

     கேள்வி

    கேள்வி

    அதேநேரம் இதனை ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது எம்டிசி பேருந்துகளில் கானா பாடல்களைப் பாடினால், அது பொதுமக்களுக்குத் தொல்லை தருவதாகவும் public nuisanceஆகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். அதுவே மெட்ரோ ரயில்களில் கிட்டாருடன் ஏர்ஆர் ரகுமான் பாடல்களைப் பாடினால் அதை Chill vibes என எப்படிக் கூறலாம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

     கானா பாடினால் nuisanceஆ

    கானா பாடினால் nuisanceஆ

    அதாவது மெட்ரோ ரயிலில் இந்த இளைஞர்கள் பாடும் பாடலை யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், கானா பாடலை பாடும்போது மட்டும் அதை என்ஜாய் செய்ய முடியாமல். அது nuisanceஆக மக்கள் பார்ப்பது ஏன் என்பதே அவர்களின் வாதம். இது தொடர்பாக ஒருவர் தனது ட்விட்டரில், "வட சென்னை இளைஞர்கள் MTC பேருந்துகளில் கானா பாடல்களைப் பாடுவது nuisanceஆக கருதப்படுகிறது, ஆனால் கிட்டார், மெலோடிகா, கிளாப்பாக்ஸ் கொண்ட மெட்ரோவில் இளைஞர்கள் ரகுமான் பாடல்களைப் பாடுவது nuisance இல்லையா" என ட்வீட் செய்துள்ளார்.

     எல்லாம் ஒன்று தான்

    எல்லாம் ஒன்று தான்

    இணையத்தில் வைரலாகியுள்ள இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல விதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் உடன் பயணிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு தராமல், பாதிக்காமல் இருக்கும் அனைத்து விதமான பாடல்களும் அது கானாவாக இருந்தாலும் சரி, ரகுமான் பாடலாக இருந்தாலும் சரி எல்லாம் ஒன்று தான், என்ஜாய் செய்யலாம் என்ற ரீதியிலும் ட்வீட் செய்து வருகின்றனர்.

    English summary
    Viral video of Youth singing AR Rahman song in Chennai metro creates a whole new debate. Chennai metro latest viral video in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X