இந்தி கட்டாயம் இல்லை... இது அழகான தீர்வு.. மத்திய அரசுக்கு சபாஷ் போட்ட ஏ.ஆர். ரஹ்மான்
இந்தி திணிப்புக்கு ஏஆர் ரகுமான் பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: இந்தி கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது தொடர்பாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ள அந்த ஒத்தை வரி ட்வீட்டில், தேசிய கொடியும், ரோஜா பூவும் நம்மை பார்த்து பூரிப்புடன் சிரிக்கிறது.
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியை கட்டாய பாடமாக்க மத்திய அரசு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. அந்த பணி இப்போது முடிவடைந்து, கடந்த 31-ம் தேதியும் சமர்ப்பிக்கப்பட்டது.

ஹேஷ்டேக்
இது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் https:\mhrd.gov.in என்ற இணையதளத்தில் அந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் யாருமே இதனை வரவேற்கவில்லை. பல்வேறு தரப்பில் இருந்து, பல்வேறு ரூபங்களில் எக்கச்சக்க கண்டனங்கள் வந்து குவிகின்றன. இதற்கான கண்டன ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.

வீடியோ
மத்திய அரசின் இந்த கொள்கைக்கு இசையமைப்பாளர் ரகுமானும் தனது கருத்தை சொல்லி இருந்தார். கண்டன அறிக்கை இல்லை, மேடை போட்டு முழங்கவில்லை, யாரையும் திட்டவில்லை, விமர்சிக்கவில்லை. ஒரே ஒரு வீடியோவை போட்டு மூலம் நாசூக்காக தன் நிலைப்பாட்டை கூறினார்.
|
பாட்டு
மரியான் படத்தில் வரும் "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால்தான் என்ன" என்ற பாட்டை ஒரு பஞ்சாபி பாடுகிறார்.. அதுவும் கொஞ்சும் தமிழில்! இந்த ரகுமான் தனது ட்வீட்டில் வீடியோவை பதிவிட்டதும், செம வைரலானது. அதாவது ஒரு பஞ்சாபி வாயில்கூட தமிழ் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, நாடு தழுவிய அளவில் தமிழ் பரந்து விரிந்துள்ளதை ரகுமான் அழகாக இந்த ட்வீட் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

வரைவு அறிக்கை
இந்நிலையில், 3-வது மொழியாக இந்தியை பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய அரசு தடாலடியாக பின்வாங்கியது. இதனை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையாக வெளியிட்டது.
|
தேசிய கொடி
உடனே இதனையும் ரகுமான் தனது ட்வீட்டில், "அழகிய தீர்வு, தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு" என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தை மனசார வரவேற்கும் விதமாக தேசிய கொடி பக்கத்தில் ஒரு ரோஜாப்பூவையும் வைத்துள்ளார். ரஹ்மான் டிவீட்டுக்கு இப்போது வரவேற்பு குவிந்து கொண்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications