"சாதிச்சிட்டாரே" எடப்பாடி.. தோட்டத்துக்கு வச்ச குறி.. எம்ஜிஆர் வீட்டில் "கலக தீ".. குழம்பிய போலீஸ்
அதிமுக பொன்விழாவை ராமாவரம் தோட்டத்து பங்களா அருகில் நடத்த உள்ளார் எடப்பாடி
சென்னை: அதிமுக பொன்விழாவை கொண்டாடுவதில், 2 தலைவர்கள் எடுத்த முடிவானது, எம்ஜிஆர் குடும்பத்துக்குள் கலகம் வரும் சூழலை ஏற்படுத்தி உள்ளதாம்.. என்ன நடந்தது?
அதிமுக, கட்சியின் பொன்விழாவை கொண்டாட அதிமுக திட்டமிட்டு வருகிறது.. வருகிற 17ம் தேதி அதிமுக பொன்விழா நிறைவு விழாவை விமர்சியாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது..
எனவே, தங்களின் வலிமையை மற்றவர்களுக்கு நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா மூவரும், மூன்று ரூட்டுகளில் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்வீட்டுகள்
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, சென்னை தி.நகரில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியேற்றி கொண்டாட முடிவு செய்துள்ளார். பொன் விழா ஆண்டு நிறைவினையொட்டி, 17-10-2022 அன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளை அளிக்க உள்ளேன். என்று கூறி தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு அழைப்பும் விடுத்துள்ளார்..

தோட்டம்
சசிகலாவை பொறுத்தவரை, சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் உள்ள காதுகேளாத பள்ளி வளாகத்தில் கொண்டாட சசிகலா அனுமதி கேட்ட நிலையில், பள்ளியின் நிர்வாகியான லதா ராஜேந்திரனும் அவரது வாரிசும் அனுமதி தர மறுத்து விட்டனர்.. அதனால், அதே தோட்டத்தில் எம்ஜிஆர் பங்களாவில் வசிக்கும் லதாவின் சகோதரி சுதா விஜயனை அணுகி, பொன்விழாவை கொண்டாட உங்கள் ஏரியாவில் அனுமதி கொடுக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் முடியாது என சொன்னார்கள். பிறகு கொஞ்சி பார்த்துள்ளனர்.. இதில் மனமிறங்கிய சுதா விஜயன், பங்களா வாசலில் விழாவை நடத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளதாக தெரிகிறது.

எம்ஜிஆர்
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை. சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொண்டாட திட்டமிருந்தார்.. ஆனால், பள்ளி கல்லூரி வளாகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி ஆகியவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசாணையே உள்ளது.. அதுமட்டுமல்ல, இந்த கல்லூரி நிர்வாகம் எம்ஜிஆரின் குடும்பத்தினரான லதாராஜேந்திரன், மகனான குமார் ராஜேந்திரனின் கையில் உள்ளது.. ஆனால், அவரோ சசிகலா அணியில் உள்ளார்.. எனவே, எடப்பாடி பழனிசாமியின் திட்டத்திற்கு இவர் அனுமதிப்பது சந்தேகம் என்றும் சொல்லப்பட்டது.

பர்மிஷன்
அதனால், எம்ஜிஆர் தோட்டத்தில் எம்ஜிஆர் பெயரில் உள்ள பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்க விரும்புகிறோம். அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து கோரிக்கை வைத்துள்ளனர். "17, 18 இரண்டு நாட்களும் விளையாட்டு போட்டிகள் இருப்பதால் 19-ந்தேதி வேண்டுமானால் அனுமதி தருகிறோம்" என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட, எங்களுக்கு 17-ந்தேதிதான் வேண்டும் என்று அடம் பிடித்துள்ளனர் எடப்பாடி தரப்பினர். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.

ஓகே ஓகே
இந்த நிலையில், எம்ஜிஆர் பங்களாவில் இருக்கும் மற்றொரு நபரான கீதா மதுமோகனிடம் அனுமதி கேட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. அதாவது, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் காமராஜ் மூலம் இந்த அனுமதியை கேட்டுள்ளார் எடப்பாடி. உடனே அனுமதி தந்துள்ளார் கீதா மதுமோகன். இந்த அனுமதி கிடைத்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளார் காமராஜ். காவல்துறை அனுமதிக் கொடுக்குமா? மறுக்குமா? என்று இப்போது வரை தெரியவில்லை.

பங்களா + எடப்பாடி
ஆனால், அக்டோபர் 17-ந்தேதி எம்ஜிஆர் தோட்டத்தில் பொன்விழாவை நடத்த சசிகலாவுக்கும், எடப்பாடிக்கும் தோட்டத்து பங்களாவில் வசிக்கும் நபர்களிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது. இரண்டு எதிரிகள் ஒரே இடத்தில் நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிப்பது என போலீசார் குழம்பி போயிருக்கிறார்கள். அதே 17-ந்தேதி சட்டமன்றம் கூட்டம் துவங்குவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவானால் என்ன செய்வது என்றும் போலீசார் ஆலோசிக்கிறார்கள். இதற்கிடையே, எம்ஜிஆர் அண்ணன் மகள்களான லதா, சுதா, கீதா ஆகிய 3 பேரும் ஆளாளுக்கு ஒரு முடிவை எடுத்து விழா நடத்த அனுமதியும், அனுமதி மறுப்பும் செய்திருப்பதால் அவர்களின் குடும்பத்துக்குள் கலகத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications