ஆஹா! 2 "பாக்சை" டிக் அடித்த பாஜக.. ஆம் ஆத்மி.. திரிணாமுல் ஓவர்.. அடுத்து திமுக? க்ளூ தந்த அண்ணாமலை!
சென்னை: இரண்டு முக்கியமான எதிர்கட்சிகளை மத்திய அரசின் விசாரணை நிறுவனங்கள் குறி வைத்து உள்ளன. வடஇந்தியாவில் அடுத்தடுத்து நடக்கும் இந்த ரெய்டுகள் அடுத்து தென்னிந்தியாவிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
எதிர்கட்சிகளை, மாநில கட்சிகளை மத்திய விசாரணை ஆணையங்கள் மூலம் பாஜக முடக்குவதாக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஆட்சியை கவிழ்க்கவும், குதிரை பேரம் நடத்தவும் வசதியாக இப்படி எதிர்க்கட்சி மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை விசாரணைகளை மேற்கொள்வதாக ப. சிதம்பரம் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் புகார்களை வைத்து வருகின்றனர்.
பொதுவாக காங்கிரஸ் தலைவர்கள் பலர் குறி வைக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் அல்லாத இரண்டு முக்கியமான கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தில் குறி வைக்கப்பட்டனர். ஒருவர் திரிணாமுல் காங்கிரசின் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி.
இன்னொருவர் டெல்லி துணை முதல்வர் ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா.

என்ன வழக்கு
மேற்கு வங்கத்தை சேர்ந்த முக்கியமான அமைச்சர்தான் பார்த்தா சட்டர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஜூலை 23ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டை தொடர்ந்து அமலாக்கத்துறை மூலம் இவர் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டில் இருந்தும் அவருக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்தும் 20 கோடி ரூபாய் அமலாக்கத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. பார்த்தா சட்டர்ஜி அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஆவார்.

அமைச்சர்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இந்த விவகாரம் உலுக்கி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் மணிஷ் சிசோடியா குறி வைக்கப்பட்டு உள்ளார். டெல்லியில் மது விற்பனை மற்றும் டெண்டர் தொடர்பான கலால் வரி விதிப்பில் முறைகேடு செய்யப்பட்டதாக சிசோடியா மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அம்மாநில கலால் வரி கொள்கைகளை சில மதுபான நிறுவனங்களுக்கு ஏற்றபடி மணிஷ் சிசோடியா மாற்றியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

மணிஷ் சிசோடியா
இதற்காக மதுபான நிறுவனங்களில் மணிஷ் சிசோடியாவிற்கு நெருக்கமான நபர்களுக்கு 4-5 கோடி ரூபாய் வரை கொடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகம் என்று 15 இடங்களில் ரெய்டு நடத்தியது. இதில் சிபிஐ மணிஷ் சிசோடியா மீது வழக்கும் பதிவு செய்தது. இந்த நிலையில் மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பாக்ஸ்
பாஜகவிற்கு எதிராக இருக்கும் இரண்டு பெரிய எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ். ஆம் ஆத்மி. இந்த இரண்டு கட்சிகளும் குஜராத் சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இரண்டு கட்சிகளுக்கும் எதிராக மத்திய அரசு இந்த மூவ்களை மேற்கொண்டு உள்ளது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என்ற இரண்டு பெரிய கட்சிகளை பாஜக தற்போது குறி வைத்துள்ளது.

திமுக
இதனால் அடுத்து இன்னொரு பெரிய எதிர்க்கட்சியான திமுகவை பாஜக குறி வைக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வி எழுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலையே இதை பற்றி க்ளூ கொடுத்து இருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது அவரிடம் செய்தியாளர் ஒருவர்.. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

என்ன சொன்னார்?
போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அண்ணாமலையிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார். இவரின் பேச்சு அப்போது சர்ச்சையான நிலையில்தான் அடுத்து திமுகவும் குறி வைக்கப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications