அண்ணாமலை அதிரலியே.. எடப்பாடி அசரலியே.. "அமைதிக்கு பின்னே புயல்".. அட, இதுல மேட்டரே வேற போலருக்கே
சென்னை: தேர்தல் தேதி நெருங்கி வரும்நிலையில், பாஜகவின் அடுத்த மூவ், கூட்டணி நிலைப்பாடுகள் என்னவாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியில் இணையுமா? இணையாதா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமைதிக்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
"தனித்து போட்டியிடும் வகையில் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்" என்று தமிழக நிர்வாகிகளுக்கு சந்தோஷ் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளதால், இந்த சந்தேகம் மேலும் ஊர்ஜிதமாகி வருகிறது.

ஆனால், தனித்து போட்டி என்ற முடிவை, பாஜக அவ்வளவு சீக்கிரம் எடுக்காது என்கிறார்கள்.. காரணம், அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று தமிழக பாஜகவின் சில சீனியர் லீடர்களே கேட்கிறார்களாம். தங்களுக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், அதிமுக கூட்டணி இருந்தால்தான் தாங்கள் ஜெயிக்க முடியும், பாஜக தனித்து போட்டியிட்டால் தங்களால் ஜெயிக்க முடியாது, நினைக்கிறார்களாம்..
சீனியர்கள்: அதுமட்டுமல்ல, தனித்து போட்டியிட்டால் தேர்தலில் போட்டியிட பல சீனியர்கள் முன்வரமாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். சீனியர்களின் இந்த கோரிக்கையும் அமித்ஷாவுக்கு சென்றுள்ள நிலையில், அதிமுக சமாதானப்படுத்த விரைவில் முயலக்கூடும் என்கிறார்கள்.
ஆனால், தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆழ்மனசு விருப்பமாக இருப்பதாக தெரிகிறது. இதை பலமுறை அண்ணாமலையே வெளிப்படையாக சொல்லி உள்ளார். தன்னுடைய விருப்பத்தை, மேலிட தலைவர்களிடமும் முன்வைத்தபடியே இருந்தார்.
தனித்து போட்டி: இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, ஒரு பிரத்யேகமான செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.. அதாவது, அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது குறித்து முக்கிய டேட்டாக்களை, மேலிடத்தில் அண்ணாமலை பகிர்ந்திருக்கிறாராம்..
"எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்து அதிமுக இப்போது இல்லை. அதிமுக என்ற கட்சி உருவானதும் 30 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததற்கும் முக்கிய காரணமே திமுக எதிர்ப்பு தான். திமுகவை திமுக தீய சக்தி என்றும், திமுகவினரை பகையாளர்களாக கருதியுமே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மாறி மாறி அரசியல் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவானது, இன்னொரு திமுகவாக மாறிவிட்டது..
அதிமுக ஓட்டுக்கள்: அருந்ததிகள் இதனால் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காது.. மேலும், எம்ஜிஆர்- ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவுக்கு ஓட்டு போட்ட ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், முத்தரையர்கள் , பிராமணர்களின் ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது...
இதைதவிர, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் ஆகியோர் பிரிந்து நிற்பதால் இந்த பாதிப்பு ஏற்படும்.. இதை கருத்தில் கொண்டு, கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும்.. ஒருவேளை தனித்து போட்டி இல்லாவிட்டால், "ஒருங்கிணைந்த அதிமுக" என்பது தவிர்க்க முடியாதது என்று அண்ணாமலை சொன்னாராம்.
சமாதானம்: அண்ணாமலையின் இந்த கருத்துக்களை, மேலிட பாஜகவும் புறந்தள்ளிவிடாமல், கவனத்தில் கொண்டிருக்கிறது. எப்படியும், இந்த 2 முடிவுகளில் ஏதாவது ஒன்றை கையில் எடுக்க போவதாகவும் தெரிகிறது.
எனினும், கூட்டணி நிலைப்பாட்டை அதிமுக அறிவித்தபிறகும்கூட,, பாஜக எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் சமாதானப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், இதுவரை அப்படியான சமாதான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.. அதிமுக விஷயத்தில் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.
ஒருமுறை செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியபோது, "பாஜக தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால், தேசியக் கட்சிகளுக்கே உரிய மேனேஜர் பட்டத்தை உடைத்து, தலைவர்கள் இந்தக் கட்சியில் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தால், கட்சி தானாகவே வளரும்" என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, "இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ அண்ணாமலை வரவிலலை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல இருக்காது. மேனேஜர் போல தாஜா வேலை எல்லாம் செய்யமாட்டேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் நான் இருப்பேன். நான் எடுக்கும் சில முடிவுகள், சிலருக்கு அதிர்ச்சியளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
பெருத்த அமைதி: இப்படியெல்லாம் பேசிய அண்ணாமலை, அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, கூட்டணி குறித்தோ இதுவரை வாயே திறக்காமல் அமைதி காத்து வருவதுதான் பலவித குழப்பங்களை ஏற்படுத்தியவாறே உள்ளதாம்.. ஆனால், இந்த அமைதிக்கு பின்னால் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
அதாவது, "தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், இப்போதைக்கு அதிமுக விவகாரத்தை கண்டு கொள்ள வேண்டாம், அதிமுகவை விட்டுப்பிடிப்போம், அதுவரை மற்ற வேலைகளை பார்ப்போம், தேர்தல் நெருங்கும்போது கூட்டணி விஷயத்தை கையில் எடுக்கலாம் என்று மேலிட பாஜக தெரிவித்துவிட்டதாம். அதனால்தான், அண்ணாமலையோ, அமித்ஷாவோ, இதுவரை அதிமுக விவகாரம் குறித்து பேசவில்லை என்கிறார்கள். அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications