அதிமுக கனவு செதில் செதிலாக சிதறுது.. சீமானை வளைத்து போட்ட டெல்லி? களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வளைத்து போட டெல்லி பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறதாம். அவர் எடுக்க போகும் முடிவில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 2 முக்கிய அரசியல் தலைவர்களின், ஒரு புதிய அரசியல் தலைவரின் அரசியல் எதிர்காலமே இருக்கிறது. முக்கியமாக நாம் தமிழரை பாஜக கூட்டணிக்கு இழுக்க டெல்லி முக்கியமான மாஸ்டர்மைண்ட் ஒருவரை களமிறக்கி உள்ளதாம்.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி. இது நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Naam Tamilar Seeman

2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. ஆனால் சின்னம் மாறினாலும் வாக்கு சதவிகித ரீதியாக நாம் தமிழர் முன்னேறி உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 8.9 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 9 சதவிகிதம் வாக்குகள் அவை.

சின்னம் மாற்றம்; கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.

அந்த சின்னம் இல்லாமல் மைக் சின்னத்தில் போட்டியிட்டது அவர்களுக்கு பெரிய சிக்கல் ஆனது. தற்போது நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் சீமான் கேட்கும் சின்னம் கிடைக்கும். அதோடு இல்லாமல் சீமான் அந்த சின்னத்தை அங்கீகாரத்தை இழக்கும் வரை எத்தனை தேர்தல்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்த முடியும்.

சீமான் முடிவு: இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுக்க போகும் முடிவில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 2 முக்கிய அரசியல் தலைவர்களின், ஒரு புதிய அரசியல் தலைவரின் அரசியல் எதிர்காலமே இருக்கிறது.

சீமானை இழுக்க பார்க்கும் பாஜக: முக்கியமாக நாம் தமிழரை பாஜக கூட்டணிக்கு இழுக்க டெல்லி முக்கியமான மாஸ்டர்மைண்ட் ஒருவரை களமிறக்கி உள்ளதாம்.

சீமானை கூட்டணிக்கு இழுக்க ஒரு தேர்தல் ஆலோசகரை பாஜக பயன்படுத்த உள்ளதாம். அவர் சீமானை கண்டிப்பாக பாஜக கூட்டணிக்கு அழைக்கிறேன் என்று டெல்லிக்கு உறுதி அளித்துள்ளாராம். சீமானை கொண்டு வருவோம். கவலைப்பட வேண்டாம். 2026ல் சீமான் நாம் தமிழர் + பாஜக + பாமக என்பதுதான் என்டிஏ கூட்டணியாக இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளாராம்.

சீமான் முடிவு: இதனால் சீமான் எடுக்கும் முடிவை பொறுத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின், பாஜக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் எதிர்காலம் உள்ளது. எப்படி என்றால்..

1. சீமான் உடன் கூட்டணி வைக்க எடப்பாடி முயலும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் அது அதிமுகவின் எழுச்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்த வாய்ப்பு கொடுக்கும்.

2. சீமான் உடன் கூட்டணி வைக்க எடப்பாடி மட்டுமின்றி விஜயும் முயலும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் அது விஜயின் எழுச்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்த வாய்ப்பு கொடுக்கும்.

3. சீமான் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றால் அது திமுகவிற்கு சாதகமாக மாறும்.

4. ஒருவேளை சீமான் - விஜய் மூன்றாது அணி அமைத்தால் அது அதிமுகவை அப்புறப்படுத்தி அவர்களின் வீழ்ச்சிக்கு உதவும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுக்க போகும் முடிவில்தான் மேற்கண்டவர்களின் எதிர்காலம் உள்ளது.

வாக்கு வங்கி: தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தர்க்க அடிப்படையில் பார்க்காமல் சதவிகித அடிப்படையில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம்.

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம் .

தனியாக திமுக வென்ற வாக்குகள் 26.93 சதவிகிதம் .

அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் .

தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம் .

நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.

கணக்குப்படி பார்த்தால் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம். இது சட்டசபை தேர்தலில் குறைந்தால் கூட 43 வரை செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். எதிர் பக்கம் அதிமுக கூட்டணிக்கு 25 சதவிகிதம் வரை வரலாம். நாம் தமிழர் அவர்களோடு சேரும் பட்சத்தில் அது 33 ஆக உயரும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+