Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவேந்திரகுல வேளாளர்கள் கோழையா? செல்வராஜை பாராட்டவும் முடியல.. திட்டவும் முடியல: டாக்டர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வாழை" படத்தின் வாயிலாக, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களை கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் "வாழை" திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வெற்றிபெற்றுள்ளது...

dr krishnasamy mari selvaraj vaazhai

வெற்றிப்படம்: மாரி செல்வராஜ் முதல்முறையாக தயாரித்து இயக்கியிருக்கும் இந்த படத்தில், அவரது பள்ளிப்பருவத்தில் வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டதை மையமாக கொண்டு கதையை உருவாக்கியிருந்தார்.. இந்த படம் வெளியாகிய இரண்டு நாட்களில் வாழை 3 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

அதற்கேற்றபடி, பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் 'வாழை' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு, மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டி நெகிழ்ந்துள்ளனர்.. இது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதேபோல, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு, மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

திருமாவளவன்: இதில், விசிக திருமாவளவன், வாழை படத்தை பார்த்துவிட்டு, நேரடியாக மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியிருந்தார்.. மாரி செல்வராஜின் வீட்டிலேயே அவர்களின் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழை இலையில் உணவு சாப்பிட்டார்..

இப்படிப்பட்ட சூழலில், மாரி செல்வராஜை பாராட்ட நினைக்கிறேன், பாராட்டவும் முடியவில்லை.. திட்ட நினைக்கிறேன், திட்டவும் முடியவில்லை என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி பதிவு ஒன்றை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:

அனுதாபங்கள்: "இம்மண்ணின் பூர்வீக குடிமக்களைப் பெருமைப்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.! ஆனால் சிறுமைப்படுத்தி இருக்கக் கூடாது. போராட்ட உணர்வுகளை கூர்மைப்படுத்தாமல் போயிருக்கலாம்!! ஆனால், அழவைத்து அனுதாபம் தேடி உணர்வுகளை மழுங்கடிக்க முயற்சித்திருக்கக் கூடாது.! 'வாழை'யை சொல்லி கூலிகளாக - கோழைகளாக்க வேண்டாம்.

எந்த வெற்றி படைப்பாளிகளும் தங்கள் வலிகளைச் சொல்வதால் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. சக மனிதர்களின் வலிகளைச் சொல்வதாலும், அதற்கான காரணிகளைக் களைவதற்காகக் களத்தில் நிற்பதாலும் தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஒரு படைப்பாளி தனது வலிகளைப் பதிவு செய்வது என்பது வேறு; அதை அவன் சார்ந்த சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்வது என்பது வேறு.!

எழுச்சிகள்: தனது வலிகளை சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்கின்ற பொழுது அல்லது வலிந்து தனது வலியை இந்த சமூகத்தில் விதைக்கின்ற போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சினிமா திரைப்படங்கள் சமூகத்தில் எழுச்சியை உண்டாக்கும்; அதே போல எழுச்சியை நீரூற்றியும் அணைக்கும்.!

இம்மண்ணின் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை படம் போட்டுக் காட்டி யாருடைய அனுதாபங்களையும், அதன் மூலம் வசதிகளையும் தேட முயலக் கூடாது.

போராட்ட காலம்: வாழையைப் பற்றிப் பேசும் பொழுது மாபெரும் ஒரு சமுதாயத்தை கோழையாக்குகின்ற வகையில் எவரின் எழுத்துக்களோ, பேச்சுக்களோ, நடிப்புக்களோ, சினிமாக்களோ அறவே கூடாது. தென் தமிழகத்தின் முக்கிய ஒரு கிராமத்திலிருந்து, தென் தமிழக தேவேந்திர குல வேளாளர்களின் முக்கியமான போராட்ட காலகட்டங்களில் வாழ்ந்து, இன்று திரைத்துறையில் பேசப்படக்கூடிய, போற்றப்படக்கூடிய ஒரு இயக்குநராக ஒருவர் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்; அதற்காகப் பாராட்டுகிறோம்.

அதே சமயத்தில் தனது இழந்த அடையாளத்தை - அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம்; ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் கூலிக்காரர்களாகவே சித்தரித்துச் சிறுமைப்படுத்துகின்ற போக்கும்,அவர்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.!

திட்ட முடியல: எனினும், பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை. தன்னைக் காட்டிலும் தனது குடும்பம் பெரிது; தனது குடும்பத்தைக் காட்டிலும் இந்த குலமும் இந்த மண்ணும் மக்களும் பெரிது என்ற அடிப்படையில் வாழ்ந்து, என்றோ வீழ்ந்து, இன்று மீண்டும் வீறுகொண்டு எழுந்திருக்கக் கூடிய மாபெரும் சமுதாயத்தை 'வாழை'யை சொல்லி கூலிகளாக - கோழைகளாக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+