சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவரா?" இங்கே வரப்போறாராமே.. காரணமே அமித்ஷாதான்.. 5 தாமரைகளுக்கு குறி.. பாஜகவை சமாளிக்குமா திமுக

திமுக, பாமக அதிருப்தியாளர்கள் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக படு ஸ்பீடாக அரசியல் செய்து வருகிறது.. அந்த வகையில் ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக பாஜகவின் அரசியல் என்பதே வித்தியாசமானது.. எல்லாரும் தேர்தலை முன்னிறுத்தி அரசிய்ல செய்தால், பாஜக மட்டும் தேர்தலுக்கு பிந்தைய அரசியலையே பிரதானமாக கையில் எடுத்து வருவது இயல்பாகும்.

அதாவது, தேர்தல் சமயத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, தங்கள் பக்கம் இழுப்பது போன்ற சூட்சுமங்களை கையாண்டு, பிரதான கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாமல் போக செய்துவிடும்.. அதன்பிறகு, ஆட்சியில் பங்கு, கூட்டணி என்று விஷயத்துக்கு வந்து நிற்கும்.

EXCLUSIVE: என்னை தொட்டு பாஜக பிரமுகர் தள்ளிவிட்டாரு.. பாஜகவினர் யாருமே உதவல -பெண் செய்தியாளர் புகார் EXCLUSIVE: என்னை தொட்டு பாஜக பிரமுகர் தள்ளிவிட்டாரு.. பாஜகவினர் யாருமே உதவல -பெண் செய்தியாளர் புகார்

 வடமாநிலங்கள்

வடமாநிலங்கள்

சமீபகாலமாகவே பெரும்பாலான வடமாநிலங்களில் இப்படித்தான் பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது என்பதை நாடறியும்.. ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திடீரென புதுச்சேரி பக்கம் இதே பார்முலாவை கையில் எடுத்தது பாஜக.. அரசியல் வியூகத்தில் அன்று ஜெயலலிதாவையே திணற வைத்த ரங்கசாமி, பாஜகவின் காய் நகர்த்தலில் சிக்கிதான் போனார்.. எதிர்பார்த்தபடியே கூட்டணி ஆட்சியும் அமைந்தது.

திருமாவளவன்

திருமாவளவன்

அந்த நேரம் திருமாவளவன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே நியமன எம்எல்ஏ-க்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சட்டத்துக்கு விரோதமான முறையில், கொல்லைப்புறமாக, ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜகவின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.. நட்புக்கு துரோகம் இழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர்.காங்கிரஸ் இந்த நிலையிலாவது விழித்துக்கொள்ள வேண்டும்" என்று எச்சரித்திருந்தார்.

 திருமா பேச்சு

திருமா பேச்சு

திருமாவளவன் சொன்னது அப்படியே நம் தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்துவிட்டது.. எங்கெல்லாம் அதிருப்தியாளர்கள் உள்ளார்களோ, அவர்களை தட்டி தூக்க பக்காவாக பிளான் போட்டுள்ளது பாஜக... இப்போதைக்கு அதிமுக பலவீனமடைந்து வருகிறது.. இதை நயினார் போன்றவர்கள் சுட்டிக்காட்டியும், அதிமுக தன்னை திமுகவுக்கு நிகராக நிலைநிறுத்தி கொள்ளாதது பெரும்பாலான அதிமுக புள்ளிகளை கவலைக்குள்ளாக்கி உள்ளது... இப்படிப்பட்டவர்களை தான் பாஜக குறி வைத்து வருகிறது.

மதிமுக

மதிமுக

மற்றொரு பக்கம் மதிமுக, பாமக என இரண்டு கட்சிகளுக்குமே வலை விரித்துள்ளது.. சமீபகாலமாகவே பாமக போட்டியிடும் தேர்தல்களில் சறுக்கலை சந்தித்து வருகிறது.. வடமாநிலங்களிலேயே தன் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், அங்குள்ள புள்ளிகளுக்கும் ஸ்கெட்ச் போட்டு வருகிறது.. மதிமுகவை பொறுத்தவரை, உட்கட்சி, வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளது.. ஏற்கனவே சில நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், அவர்கள் உட்பட மேலும் சிலருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

இதனிடையே, காங்கிரஸ் கரைந்து கொண்டிருக்கிறது.. மய்யம் மங்கலாகி கொண்டிருக்கிறது.. அங்குள்ள புள்ளிகளும் பாஜகவுக்கு தாவி கொண்டிருக்கிறார்கள்.. மேற்கூறிய கட்சிகள் எல்லாம் தமிழக அரசியல் களத்தை நிர்ணயம் செய்யக்கூடியவையாக இருந்தவை என்றாலும், தற்போது பல இடியாப்ப சிக்கல்களில் சிக்கி உள்ளது.. ஆனாலும், பாஜக திமுகவை டார்கெட் செய்து வருகிறது.. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள திமுக மாஜியை, தங்கள் பக்கம் இழுக்க வியூகம் அமைத்து வருகிறதாம்.. இந்த விஷயம் தெரிந்து திமுக, அந்த மாஜியை சரிக்கட்ட தொடங்கி உள்ளதாம்.

 ஹாட் டாபிக்

ஹாட் டாபிக்

இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.. கொங்குவில் இப்போதுதான் திமுக செல்வாக்கை எட்டிப்பிடித்து வரும் நிலையில், பாஜக அதற்கும் ஒரு செக் வைக்க முயன்று வருகிறது.. இதற்கெல்லாம் காரணம் அந்த 5 சீட்கள்தான்.. வரும எம்பி தேர்தலில் 5 சீட்டுக்களையாவது தமிழகத்தில் இருந்து அனுப்ப வேண்டும் என்று அண்ணாமலையிடம் அமித்ஷா உத்தரவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான வேலைகள்தான் பாஜகவில் நடந்து கொண்டிருக்கிறது..

 20 பேர்

20 பேர்

ஆனால், அண்ணாமலையோ தன்னுடைய கட்சி சார்பில் 20 எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப பிளான் செய்து வருகிறாராம்.. நேற்றைய தினம் மோடியின் வருகையும், கனிவான விசாரிப்பும், தமிழக பாஜகவுக்கு மேலும் தெம்பை தந்துள்ள நிலையில், 5 தாமரைகளை ரெடி செய்வதற்கான ஆயத்த பணிகளில் இறங்கி உள்ளது கமலாலயம்.. பார்ப்போம்..!

English summary
Are DMK and PMK seniors joining BJP and What is mk stalin going to do next திமுக, பாமக அதிருப்தியாளர்கள் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X