தூண்டிலில் சிக்காத மீன்.. ஸ்டாலின் அனுப்பிய க்ளூ.. சுதாரித்து ரெடியான அமைச்சர்கள்.. பாஜக செம ஷாக்!
சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வீடுகளில் ரெய்டு நடக்கிறது. ஆனால் இந்த ரெய்டு தொடர்பாக ஏற்கனவே தகவல்கள் கசிந்து இருக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளாராம். அதில், லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள். கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள்

எனக்கு இது தொடர்பாக இரவில் அடிக்கடி முக்கிய தகவல்கள் வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் ரெய்டை எதிர்பாருங்கள். சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக மேலே தகவல் அனுப்புகிறார்கள். நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள். மாநில அதிகாரத்தில் இருக்கும் சிலரே கருப்பு ஆடுகள் போல செயல்படுகிறார்கள், என்று கூறியுள்ளார்.
ரெய்டு; இந்த நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
எ.வ. வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் படுதோல்வியே ஐடி ரெய்டுக்கு காரணம் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது.இந்தியா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் கட்டமைக்க முயற்சி செய்வதால் கோபம் , என்று அவர் கூறியுள்ளார்.
தகவல் கசிந்துள்ளது; ஆனால் இந்த ரெய்டு தொடர்பாக ஏற்கனவே தகவல்கள் கசிந்து இருக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன. அதன்படி ஏற்கனவே ரெய்டு நடக்க போகிறது என்ற செய்தி அமைச்சர்களுக்கு சென்றுள்ளது. இதனால் அமைச்சர்கள் ஏற்கனவே ரெடியாகி இருந்ததாக கூறப்படுகிறது.
அதாவது டாப் அமைச்சர்களில் ஒருவர் ரெய்டுக்கு உள்ளாகலாம் என்ற தகவல் சென்றுள்ளது. இதனை கேட்டுதான் டாப் அமைச்சகர்கள் பலரும் ரெய்டு தொடர்பாக சுதாரித்துக்கொண்டுதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கு ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் வார்னிங் கொடுத்துவிட்டார். ரெய்டு நடக்கலாம் என்று கூறிவிட்டார்.
அதோடு போக ரெய்டு தொடர்பாக தகவல்களும் கசிந்து உள்ளதால் எ.வ வேலு உள்ளிட்ட எல்லா அமைச்சர்களும் சுதாரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கசிவு காரணமாக டெல்லி தரப்பும் அப்செட்டில் இருக்கிறதாம். எப்படி தகவல் கசிந்தது என்று தெரியாமல் கடும் அப்செட்டில் டெல்லி இருக்கிறது,
திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள் என்று டாப் லீடர்கள் அடுத்தடுத்து அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தொடர் ரெய்டுகள் காரணமாக திமுக தரப்பிற்கும் பிரஷர் அதிகரித்துள்ளது. ரெய்டுகள் மூலம் இது வரை குறி வைக்கப்பட்ட திமுகவின் டாப் தலைவர்கள் யார் என்று பார்க்கலாம்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை; சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இப்போதும் சிறையில்தான் இருக்கிறார். இதுவரை செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைக்கவில்லை.
பொன்முடி: சமீபத்தில் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.
தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
இப்படிப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதை தொடர்ந்து திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications