தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் கிடைக்குமா? தாங்க முடியாத அளவிற்கு விலைகள்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, வரத்து குறைவால் மளிகை பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து வகையான மளிகை பொருட்களையும் குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், தேவையான பல மளிகை பொருட்கள் தமிழகத்தில் உற்பத்தி ஆவது இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து தான் வருகிறது. வறட்சி மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக ல் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை மாதம் மாதம் அதிகரித்து வருகிறது. சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பல மளிகை பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அரிசி உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி லாரிகளில் வருகிறது. அப்படி அரிசியை கொண்டு வருவதால், அரிசி ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு மேல் 'உயர்ந்துள்ளது.
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெளி மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களின் வரத்து குறைந்துவிட்டது.. இதன் காரணமாக அவற்றின் விலை கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. துவரம் பருப்பு, பூண்டு, அரிசி ஆகிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு ரூ.140 வரை விற்கப்பட்டு வந்த துவரம் பருப்பு , இப்போது ரூ.180 வரை விற்கப்படுகிறது.
அதேபோல் ஒரு கிலோ ரூ.140 வரை விலை குறைந்த பூண்டு, தற்போது ஒரு கிலோ ரூ.250-க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை தொடர்ந்து உயருகிறது. ரூ.50-க்கு கீழ் அரிசி வாங்கவே முடியாத நிலை வந்துவிட்டது. 50 ரூபாய் அரிசி இப்போது 70 ரூபாய் என்கிற அளவிலும், 60 ரூபாய் அரிசி 77 ரூபாய் அல்லது 80 ரூபாய் வரையிலும் ஒரு கிலோவிற்கு உயர்ந்துவிட்டது..
வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் சன்னரகம் புழுங்கல் அரிசி கிலோ ரூ.65 ஆகவும், பாசுமதி அரசி ரூ.105-க்கு மேல் விற்கப்படுகிறது. இதேபோல் உளுத்தம் பருப்பு ரூ.120-லிருந்து ரூ.135, கடலைப்பருப்பு ரூ.75-லிருந்து ரூ.85, சர்க்கரை ரூ.40-லிருந்து ரூ.42, குண்டு மிளகாய் ரூ.180-லிருந்து ரூ.245 ஆக உயர்ந்துவிட்டது.
நீட்டுமிளகாய் ரூ.180-லிருந்து ரூ.190, தனியா ரூ.105-லிருந்து ரூ.110 என விலை உயர்ந்துள்ளது. ரூ.82-க்கு விற்கப்பட்ட கடுகு ரூ.95-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட வெந்தயம் ரூ.95-க்கும் விற்பனையாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்பனை ஆகிறது.
மளிகை பொருட்கள்: எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர செலவு கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு உள்பட பல்வேறு மளிகை பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளின் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications