Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அச்சாணி" முறியுதா.. பாஜகவில் புது கட்சிகள்.. எடப்பாடிக்கு செக்.. திமுகவுக்கு சவால்.. அப்ப அவ்ளோதானா

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில், பாஜகவின் கூட்டணி பற்றி கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது, தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

நேற்றைய தினம், பாஜக மாநில மையக் குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது... இதில், தேசியப் பொதுச் செயலாளர் சிடி ரவி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.. எனினும், மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லும்படி, அண்ணாமலைக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

 லீக் ஆடியோ

லீக் ஆடியோ

அதாவது, சீனியர்களை அண்ணாமலை மதிப்பதில்லை, தன்னை எதிர்ப்பவர்களை ஆபாச வலையில் விழ வைத்து வீடியோ, ஆடியோ எடுத்து வெளியிடுவது என்பது போன்ற சில குற்றச்சாட்டுகள் வந்திருந்த நிலையில், அதுகுறித்து மேலிடம் கடந்த வாரம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.. அதைத் தொடர்ந்துதான் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது, மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லும்படி அண்ணாமலைக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், தேர்தலுக்கு தயாராக இருக்கும்படியும் அதற்கான வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அதுவரை தேவையில்லாத பிரச்னைகளில் தலையிட வேண்டாம் என்றும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 பூத் கமிட்டி

பூத் கமிட்டி

இந்நிலையில், இந்த கூட்டத்துக்கு பிறகு, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "மக்களவைத் தேர்தல், கிளை அளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது... ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் அளவில் இருந்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசென்று, அந்த திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

 திடீர் சேன்ஞ்

திடீர் சேன்ஞ்

வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது. அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாஜகதான் தலைமை வகிக்கிறது. இந்த கூட்டணியில் புதிதாக மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது... அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது... தமிழகத்தில் பாஜக முதன்மையான கட்சியாக வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்... உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதால் தமிழகத்துக்கு நன்மையா, கெடுதலா என்பது இனிதான் தெரியவரும்.

 கற்பனை கற்பனை

கற்பனை கற்பனை

தமிழகத்தை கெடுக்காமல் நிர்வாகம் செய்ய, புதிய அமைச்சரான உதயநிதி முன்வர வேண்டும். நல்ல முறையில் நிர்வாகம் செய்ய அவர் முன்வர வேண்டும் என தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறேன். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்பது ஸ்டாலினின் கற்பனை... திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிடும். ஆனால், அவர்களால் தனித்துப் போட்டியிட முடியாது... பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

 கேம்ப்ளிங்

கேம்ப்ளிங்

இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்... மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் தமிழகத்தில் பாஜக முதல் நிலைக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது... ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் தெளிவான முடிவு எடுப்பார்.. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜகதான் தலைமை.. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்.. திமுக - காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், பாஜகவும் தேர்தலை தனித்து சந்திக்க தயார்" என்று கூறினார்.

 கமல்லா?

கமல்லா?

பொன்.ராதாவின் இந்த பேச்சில் 2 விதமான விஷயங்கள் உற்றுநோக்கப்படுகின்றன.. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்த நிலையில், இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜகதான் தலைமை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கடந்த முறை சட்டசபை தேர்தலின்போதே, முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் முதல் வானதி சீனிவாசன் வரை சொல்லி வந்தனர்.. இப்போது எம்பி தேர்தல் என்பதால், கூட்டணி யார் தலைமையில் அமைய போகிறது என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

 விஜய்யகாந்த்தா

விஜய்யகாந்த்தா

அதேபோல, கூட்டணியில் புதிதாக மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், எந்த கட்சி என்று தெரியவில்லை.. அமமுகவை சொல்கிறாரா? தேமுதிகவை சொல்கிறாரா? பாமகவை சொல்கிறாரா? அல்லது கமலை சொல்கிறாரா? என்று தெரியவில்லை.. ஆனால், மேலும் சில கட்சிகள் என்பதால், நிச்சயம் அது தினகரனாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.. அதேபோல, திமுக - காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக நின்றால், பாஜகவும் தனித்து நிற்க தயார் என்கிறார் பொன்.ராதா.. இது அதிமுகவுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.. அதேசமயம், பொன்.ராதாவின் இந்த சவாலை இதை திமுக ஏற்குமா? அல்லது தேசிய கட்சியான காங்கிரஸ் ஏற்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+