"இவருமா".. இங்கேயே?.. திமிங்கலமே சிக்கிடுச்சே.. ஏகப்பட்ட ஓட்டையும், "காவி" பன்னீரும்.. எடப்பாடி குஷி
ஓபிஆர், ஓபிஎஸ் இருவரும் பாஜகவில் இணைய போவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன
சென்னை: ஓபிஎஸ் பாஜக பக்கம் செல்கிறாரோ என்ற கேள்வி, தமிழக அரசியல் களத்தில் வலுவாக வட்டமடிக்க துவங்கி விட்டது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே, ஓபிஎஸ்ஸின் வேகம் குறைந்து காணப்படுகிறது.. யாருக்கு தொண்டர்கள் உள்ளது என்பதை தீர்மானிக்கக்கூடியது தேர்தல் தான் என்றாலும், தற்சமயம், அதிமுக எடப்பாடி பக்கம் உள்ளதை மறுக்க முடியாது.
கடந்த 10 வருடத்துக்கும் மேலாகவே, பாஜகவின் அபிமானத்தை நிறையவே பெற்றவர் ஓபிஎஸ்.. இவரது மகன் ரவீந்திரநாத், அவையில் பேசும்போதெல்லாம், அதிமுக எம்பியா? பாஜக எம்பியா? என்று குழம்பி போகும் அளவுக்கு, பாஜகவுக்கு ஆதரவு தந்து பேசுபவர்..

ரவீந்திரநாத்
அதனால்தான், ரவீந்திரநாத்தின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மேலிடத்துக்கு கடிதம் எழுதிகூட, அதை இன்றுவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.. ரவீந்திரநாத்தும், எம்பியாகவே நீடித்து வருகிறார்.. இப்போது, அதிமுகவில் இணக்கமான சூழல் எதுவும் வராதநிலையில், ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இப்படி ஒரு பேச்சு எழுந்தது.. ரவீந்திரநாத் பிரதமர் மோடி முன்னிலையில், பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பாஜகவும் அவரை இணைத்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அப்போதே சொல்லப்பட்டன.

காவித்துண்டு
மத்திய இணையமைச்சர் பதவியை ரவீந்திரநாத் கேட்பதால், அந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாகவும் தகவல்கள் கசிந்தன.. அதற்கு பிறகு இதுகுறித்து எந்த பேச்சும் வரவில்லை.. இதற்கு பிறகு, கடந்த ஜூன் மாதம் ஓபிஎஸ் தேனிக்கு சென்றிருந்தார்.. ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருந்த நேரமது.. அப்போது ஓபிஎஸ், தேனி நோக்கி செல்லும்போது, ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் முன்பு, பாஜக மாவட்ட செயலாளர் பாண்டி, ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார்... அப்போது பாண்டி, திடீரென ஓபிஎஸ்சுக்கு காவி துண்டு அணிவித்தார்...

காவி துண்டு
உடனே, பாஜக சார்பில் பாரத் மாதா கி ஜே என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.. ஓபிஎஸ் அன்றைய தினம் காவி துண்டில் தோன்றும்போதும், ஒருவேளை பாஜகவில் இணைய போகிறாரோ என்ற பேச்சு அப்போதும் ஓடியது. 2 நாட்களுக்கு முன்பும், குஜராத் சென்றிருந்த ஓபிஎஸ், காவி துண்டில் காட்சி தந்தார்.. முழுக்க முழுக்க பாஜக பிரமுகரை போலவே காணப்பட்டார்.. ஓபிஎஸ் மறுபடியும் பாஜகவுக்கு செல்ல போகிறாரோ என்ற பேச்சு இப்போதும் எழுந்துள்ளது.. இதுகுறித்து நாம் அரசியல் ஆலோசகர்கள் ஒருசிலரிடம் இதுகுறித்து கேட்டோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

இலை தலை
"ஓபிஎஸ்ஸுக்கு பெரிதாக கட்சிக்குள் பலம் இல்லை என்பது உண்மைதான்.. போட்டி பொதுக்குழுவை நடத்துவதாக 2 மாதத்துக்கு முன்பேயே சொல்லியிருந்தார்கள்.. ஆனால், பொதுக்குழுவை கூட்டி, அந்த கூட்டத்துக்கு யாரும் நிர்வாகிகள் வராமல் போய்விட்டால், அது தனக்கு மேலும் இழுக்காகிவிடும் என்பதால்தான், பொதுக்குழுவை இப்போதுவரை அவரால் கூட்ட முடியாமல் போனதாக தெரிகிறது.. இதுநாள்வரை, ஓபிஎஸ் + ஓபிஆர் இருவர் மட்டுமே பாஜகவால் லாபம் அடைந்துள்ள நிலையில், தென்மண்டலத்துக்கு பெரிய அளவுக்கு நன்மை கிடைத்துவிடவில்லை.. தேர்தல் ஆணையத்தை மட்டுமே இப்போதுவரை ஓபிஎஸ் நம்பி உள்ளார்.

லாபக்கணக்கு
பாஜக மேலிட ஆதரவு ஒருபக்கம் இருந்தாலும், இரட்டை இலை விஷயத்தில் ஒரு இறுதியான முடிவை உடனடியாக தெரிவிக்கும்படியும், அதில் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டு வருவதாக தெரிகிறது. அந்தவகையில், இலை விஷயத்தில் பாதகமான முடிவு எட்டப்பட்டால், ஓபிஎஸ், பாஜக பக்கம் தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. காரணம், பாஜகவுடன் இணைந்து செயல்பட தயார் என்றும் 4 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் மேலிடத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.. எனவே, எடப்பாடி கைவிட்டாலும், ஓபிஸ்ஸை கூட்டணியில் சேர்த்து கொண்டு, எப்படியும் ஒரு சீட்டினை பாஜக தந்துவிடும்.. எனவே, ஓபிஎஸ் பாஜகவுக்கு சென்றாலும் லாபம்தான்..

கோட்டைவிட்டாச்சு
ஆனால், அதிமுகவில் இருந்துகொண்டு, பாஜக சார்பாகவே பேசுவதும், காவி துண்டை அணிந்து கொள்வதும், பாஜக பிம்பமாகவே நடமாடுவதும், தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.. பாஜக எதிர்ப்பு என்பது அதிமுக தொண்டர்களிடமே அபரிமிதமாக உள்ளது.. ஆரம்பத்தில் இருந்தே திமுக எதிர்ப்பு என்ற விஷயத்திலும் ஓபிஎஸ் கோட்டை விட்டுவிட்டார்.. பாஜக எதிர்ப்பு என்பதிலும் கோட்டை விட்டுவிட்டார்.. எனவே, அதிமுகவில் ஓபிஎஸ் இருந்தால், "திமுக + பாஜக" என இரு கட்சிகளையே வலுவாக எதிர்க்க வேண்டும், இல்லாவிட்டால் பாஜகவிலேயே இணைந்துவிட வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, அதிமுகவில் இருந்து கொண்டு, பாஜககாரராக இருப்பது ஓபிஎஸ்ஸுக்குதான் மைனஸ்..

வைத்திலிங்கம்
இப்போதைக்கு ஓபிஎஸ்ஸிடம் இருப்பது வைத்திலிங்கம் மட்டும்தான்.. அவர்தான் ஆரம்பத்தில் இருந்து உறுதியாக இருந்து வருகிறார்.. ஆனால், எதிர்பார்த்தபடி ஓபிஎஸ்ஸின் அரசியல் கைகூடி வரவில்லை.. நாளைக்கு பாஜக பக்கம் ஓபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துவிட்டாலோ, அல்லது கூட்டணி வைத்தாலோ, வைத்திலிங்கம் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை.. இப்போதே அவரை எடப்பாடி தரப்பினர் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்வதாக சொல்கிறார்கள்.. கொங்குவுக்கே நிறைய முக்கியத்துவம் தருவதால்தான், எடப்பாடியுடன் அதிருப்தி கொண்டு, முக்கியமாக வேலுமணியுடன் அதிருப்தி கொண்டு, ஓபிஎஸ் பக்கம் போனார் வைத்திலிங்கம்.. இப்போது, எடப்பாடி தரப்பினர் இவருக்கு தூண்டில் போடுவதாக தெரிகிறது" என்கிறார்கள்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications