"அவரை" தூக்குங்க..மாஸ்டர் கணக்கு.. பாஜகவுக்கு எதிராக திரளும் கட்சிகள்.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்
மதிமுக, திமுக, பாமக அதிருப்தியாளர்கள் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது
சென்னை: பாஜக தமிழகத்தில் மெல்ல தலைதூக்கி வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அதை ஒன்று திரண்டு தடுக்க தமிழக கட்சிகள் தயாராகி வருவதாக தெரிகிறது.. அதற்கான அறிகுறிகளும் தமிழகத்தில் தென்பட ஆரம்பித்துவிட்டன..!
எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜக மட்டும் தேர்தலுக்கு பிந்தைய அரசியலையே பிரதானமாக கையில் எடுக்கும்.. இந்த டெக்னிக் அந்த கட்சிக்கு பெருமளவு உதவி புரிந்தும் வருகிறது.
அதாவது, தேர்தல் சமயத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, பதவி, பொறுப்புகளை காட்டி தங்கள் பக்கம் இழுப்பது போன்ற சூட்சுமங்களை கையாளும்.. பிறகு, அந்த தேர்தலின் முடிவில் பிரதான கட்சிக்கு மெஜாரிட்டியும் இல்லாமல் செய்துவிடும்.. அதன்பிறகு, ஆட்சியில் பங்கு, கூட்டணி என்று விஷயத்துக்கு வந்து நிற்கும்.

வடமாநிலங்கள்
சமீபகாலமாகவே பெரும்பாலான வடமாநிலங்களில் இப்படித்தான் பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது என்பதை நாடறியும்.. இதே ஃபார்முலாவைதான் புதுச்சேரி பக்கம் 2 வருடங்களுக்கு முன்பு கையில் எடுத்தது. வழக்கம்போல் கூட்டணி ஆட்சியையும் பிடித்துவிட்டது.. இப்போது தமிழகத்தின் பக்கம் கவனத்தை டெல்லி மேலிடம் திருப்பி உள்ளது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கான காய்நகர்த்தல்களை இப்போதே துவங்கி விட்டது..

பாஜக பிளான்
அதன்படி, அதிருப்தியாளர்களை கட்டம் கட்ட துவங்கி விட்டது.. திமுகவுக்கு நிகராக தன்னை நிலைநிறுத்தி கொள்ளாத நிலைமையில் அதிமுக உள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தைதான் பாஜக கனகச்சிதமாக பயன்படுத்தி கொண்டுள்ளது.. அதன்படி முதலில் குறி வைத்தது பாமகதான்.. நடந்து முடிந்த தேர்தல்களில் சறுக்கலை சந்தித்து வரும் பாமக, வடமாநிலங்களிலேயே தன் செல்வாக்கை இழந்து வருவது அக்கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இதையடுத்துதான், அங்குள்ள புள்ளிகளுக்கும் ஸ்கெட்ச் போட்டு வருகிறது பாஜக..

சீனியர்கள்
ஏற்கனவே தங்களை நம்பு வந்த பாமகவின் சீனியர்களுக்கு, பெரிய பொறுப்புகளையும் தந்து அழகு பார்த்துள்ளது பாஜக.. குறிப்பாக, பாமக முன்னாள் எம்எல்ஏக்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் என ஏகப்பட்ட பேர் பாஜகவில் ஏற்கனவே இணைந்துவிட்டனர்.. அதேபோல, வன்னியர் சங்க தலைவராக இருக்கும் அருள்மொழியின் சகோதரர் இளங்கோவன், 2004-ல் கட்சியில் இணைந்ததுமே போட்டியிட சீட் தரப்பட்டது.

அகோரம்
அவ்வளவு ஏன், பாமக துணைப் பொதுச் செயலராக இருந்த அகோரம், இன்று பாஜகவில் தான்இருக்கிறார்.. சமீபத்தில் அண்ணாமலை திருவாரூரில் கூட்டத்திற்கு, பெரும் ஆட்களை திரட்டி கொண்டு வந்ததே இவர்தான் என்கிறார்கள்.. இதுபோக, கட்சியின் நிர்வாகிகள் பலரும் பாஜகவில் அடுத்தடுத்து இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிகழ்வுகள் பாமகவை கலங்கடித்து வருகிறதாம்.

5 சீட்டுகள்
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், எப்படியும் 5 சீட்டுகளையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாமக ஆர்வம் காட்டி வருகிறது.. அதனால்தான், அன்புமணியை கட்சியின் தலைவராக்கி 'பா.ம.க., 2.0' என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.. இப்போது கட்சி தாவல் என்ற பேச்சு அடிபடவும், டாக்டர் ராமதாஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் இறங்கி உள்ளார்.. மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், மாவட்ட வாரியாக ஆலோசனையும் நடத்த ஆரம்பித்துவிட்டார்..

பாமக - அதிமுக
இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, "பாமக பொறுத்தவரை, களத்தில் பாஜகதான் எதிரி.. பாமகவில் இருந்தோ, வன்னியர் சங்கத்தில் இருந்தோ, வேறு கட்சிகளுக்கு சென்றால்கூட, ஒருநாள் அவர்கள் பாமகவை நோக்கி வருவார்கள் என்று நம்பலாம்.. ஆனால், ஆர்எஸ்எஸ் - பாஜக என்பது ஒருவழிப்பாதை.. அங்கு சென்றால் இளைஞர்கள் மறுபடியும் திரும்ப மாட்டார்கள்.. வன்னியர் சங்கமும், பாமகவும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும், பாஜகவில் சேருவதை தடுக்க, நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுகவுடன் கூட்டணி?
இத்தனை வருட காலமும் திமுகவை அதிகமாக விமர்சித்து கொண்டிருந்ததே பாமகதான்.. ஆனால், இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. இந்த நிலைப்பாடு எதற்காக என்று தெரியவில்லை.. ஆனால், பாஜகவை எதிர்ப்பது சமீபகாலமாக பாமகவில் அதிகரித்துள்ளது.. அதைதான் ராமதாஸ் பேச்சில் உணரமுடிகிறது.. அதுமட்டுமல்ல, ''தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, போலீஸ் தொப்பி அணிந்த மனநிலையிலேயே இன்னும் இருக்கிறார் அண்ணாமலை" என்று அன்புமணி விமர்சித்திருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது..

சீனியர் பொன்னையன்
இதேதான் அதிமுகவிலும் நடக்க துவங்கி உள்ளது.. சீனியர் பொன்னையன் பேசிய பேச்சும், பாஜகவுக்கு எதிரான மனநிலைமையை வெளிப்படுத்தி உள்ளது.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் போன்ற தலைவர்களே பாஜக குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், பொன்னையனின் பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் இது பாஜகவுக்கு சற்று ஷாக்தான்.. இப்போது அதிமுக, பாமக, பாஜக, கட்சிகள் ஓரணியில்தான் உள்ளன.

நண்பன் - எதிரி
இதே கூட்டணியில்தான் போட்டியிட்டும் வருகின்றன.. ஆனால், இதில் பாஜகவை மட்டும் அதிமுக, பாமக கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளது, அடுத்த அரசியல் மாற்றத்துக்கான துவக்கமாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.. அதுமட்டுமல்ல, அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை என்பது நிரூபணமாகி கொண்டே வருகிறது என்றாலும், பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று திரண்டு கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications