சீரியஸ் நிலைமையாயிருமோ.. "திமிங்கலம்" சிக்கிடுச்சா? பாஜகவில் இதென்ன புதுஸா.. காத்திருக்கும் "கண்கள்"
சென்னை: விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், மாற்று கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலையை விரிக்கும் படலம் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் சமயங்களில், இதெல்லாம் வழக்கமாக நடக்கக்கூடிய இயல்புதான் என்றாலும், "அதிருப்திகள்" அதிகமாகி கொண்டிருப்பதாக, பல்வேறு யூகங்கள் றெக்கை கட்டி பறக்க துவங்கியிருக்கின்றன.
தற்போதைய மத்திய அமைச்சர் எல்.முருகன், அன்று தலைமை பொறுப்பை அலங்கரித்தபோது, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகம் எடுத்ததை மறுக்க முடியாது. பாஜகவிற்குள் புதுரத்தம் பாய்ச்சப்பட்டது.. குறிப்பாக, மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக நோக்கி வரத்தொடங்கினார்கள்.
எல்.முருகன்: திமுகவை சேர்ந்த விபி துரைசாமி, குக செல்வம் என்ற சீனியர் பிரமுகர்கள் முதல், திடமாக இருந்த குஷ்பு வரை, தன் பக்கம் இழுத்து கொண்டுவர, எல்.முருகனால் மட்டுமே அன்று சாத்தியமானது.

அதேபோல, மாற்று கட்சியிலிருந்து யார் வந்தாலும், அவர்களுக்கு உரிய பதவியை தந்து அழகு பார்க்கும் நடைமுறையும் பாஜகவுக்கு இருக்கவே செய்கிறது. அந்தவகையில், திமுகவை சேர்ந்த முன்னாள் துணை பொதுச்செயலரும், துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பே பாஜகவில் இணைந்தார்.
திமுக எம்எல்ஏ: அடுத்த கொஞ்ச நாளிலேயே, உதயநிதியை காரணம்காட்டி, திமுக எம்எல்ஏவாக இருந்த கு.க.செல்வமும் பாஜகவில் இணைந்தார்.. அடுத்த கொஞ்ச நாளில், அரசியலுக்கு வராமலேயே ரஜினிகாந்த் ரிடையர் ஆகிவிட்டதால், காங்கிரஸ் கட்சியிலிருந்த முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜனும் பாஜக பக்கம் வந்தார்..
மேலிட காங்கிரஸ் வரை பெருத்த நம்பிக்கையை பெற்றிருந்த குஷ்புவும், பாஜக பக்கம் வந்தார்.. அவரை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைய காரணமாக இருந்தார் எல்.முருகன். மாற்று கட்சிகளில் இருந்து இவர்களுக்கெல்லாம், முக்கிய பொறுப்புகளும் கட்சியில் வழங்கப்பட்டன.
பொதுத்துறை: ஆனால் இவர்கள் எல்லாம் எதிர்பார்த்தது மிகப்பெரிய பதவிகளைத்தானாம்.. குறிப்பாக, மத்திய அரசின் ஆணையம், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் நியமன பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாக தெரிகிறது. இதற்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு தராததால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, மனம்மாறி, அங்கிருந்து வெளியேறி, மறுபடியும் திமுகவுக்கு வந்துசேர்ந்தார் கு.க.செல்வம்..
அதேபோல, மாணிக்கமும் மறுபடியும் அதிமுகவுக்கே திரும்பிவிட்டார். குஷ்புக்கு மட்டுமே, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கிடைத்தது.. அதுவும் சமீபத்தில்தான் கிடைத்தது. மாற்று கட்சிகளில் இருந்து வந்த பலருக்கு மத்திய அரசில் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. விரைவில் தேர்தல் வரப்போவதால், இதில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், தேசிய எஸ்சி- எஸ்.டி., ஆணைய தலைவர் பதவியில் தன்னை நியமிக்குமாறு, பிரதமர் மோடிக்கு விபி துரைசாமி கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன..
விபி துரைசாமி: இதில், மூத்த தலைவர் விபி துரைசாமியை பொறுத்தவரை, கடந்த முறை தேர்தலின்போதே, கெங்கவல்லி தொகுதியை தன்னுடைய மகனுக்காக கேட்டிருந்தாராம்.. ஆனால் கிடைக்கவில்லை... இப்போது, மறுபடியும் மகனுக்காக நீலகிரியை கேட்க நினைப்பதாக தெரிகிறது..
சிக்கல் என்னவென்றால், எல்.முருகனும் சரி, துரைசாமியும்சரி, இருவருமே தெலுங்கு பேசும் அருந்ததியர்கள்.. இருவருமே உறவினர்களும்கூட.. இருவருமே ஒரே தொகுதிக்கு குறி வைத்துள்ள நிலையில், கமலாலயம் என்ன முடிவெடுக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால், இவர்கள் இருவரில் யாருக்கு நீலகிரியை தந்தாலும், அதை அசால்ட்டாக முறியடித்து வெற்றி வாகை சூட, திமுகவும், அதிமுகவும் துரிதமாகி வருகின்றனவாம்.
விறுவிறு பாஜக: பாஜகவில் இப்படி சில அதிருப்திகள் நிலவுவதாக "யூகங்கள்" கசிந்து கொண்டிருப்பதை, அதிமுக, திமுக கட்சிகளும் கவனிக்காமல் இல்லை.. எனினும், அவைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டு, விரைவில் தேர்தல் பணிகளில் தமிழக பாஜக மும்முரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications