மோடி வந்துவிட்டு.. திருச்சியை விட்டு செல்லும் முன்.. எடப்பாடிக்கு ஏற்பட்ட பெரிய நெருக்கடி? போச்சே!
சென்னை: பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துவிட்டு சென்ற நிலையில் வருமான வரித்துறை ரெய்டு தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இந்த ரெய்டுக்கு பின் எடப்பாடி பழனிசாமி குறி வைக்கப்படலாம் என்கிறது டெல்லி தரப்பு தகவல்கள்.
நேற்று திருச்சி விமான நிலையம் உட்பட திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில். 2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.
விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.
தமிழ் மொழி: தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி கிடைக்கிறது உலகில் எங்கே பேசினாலும் தமிழ்நாட்டை, தமிழ் மொழி பெருமையை பேசுகிறேன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினோம், என்று கூறினார்.
மோடி - எடப்பாடி மோதல்: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பொதுவாக மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் எடப்பாடி சந்திப்பது வழக்கம். சண்டை போட்டு நேரம் வாங்கி குறைந்தபட்சம் விமான நிலையத்திலாவது பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிடுவார். ஆனால் இந்த முறை எடப்பாடி அபப்டி சந்திப்பு நடத்தவில்லை.
சென்னையில் சமீபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிகமுகவின் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றம் உறுதி செய்த பின் நடந்த முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது. இதில் கூட பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பேசி இருந்தார். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் உறுதியாக உடைத்து பேசி இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று மோடியை சந்திக்காமல் எடப்பாடி அமைதியாக இருந்தார்.
ரெய்டு: பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துவிட்டு சென்ற நிலையில் வருமான வரித்துறை ரெய்டு தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இந்த ரெய்டுக்கு பின் எடப்பாடி பழனிசாமி குறி வைக்கப்படலாம் என்கிறது டெல்லி தரப்பு தகவல்கள்.
அதன்படி தமிழ்நாடு அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இந்த ரெய்டில் குறி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆட்சியில் ஒப்பந்தங்களை எடுத்த தனியார் கட்டுமான நிறுவனங்கள் பல குறி வைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றன. சென்னை, நாமக்கல், கோவை, ஈரோடு, ஆகிய இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றன.
ஈரோட்டில் 4-5 இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றன. இவை பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆகும். இந்த வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் எடப்பாடியை குறி வைத்து என்கிறார்கள். இதில் சில நிறுவனங்கள் எடப்பாடிக்கு நெருக்கமான நிறுவனங்கள்.. அவர் கடந்த ஆட்சியில் டெண்டர் கொடுத்த நிறுவனங்கள் என்று கூறப்படுகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications