4 சரவெடிகள்.. மொத்தமாக வெடிக்கும்.. டெல்லியில் திமுக ஆடும் "ஆட்டம்".. ஆளுநருக்கு குறி.. லிஸ்ட் ரெடி!
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக ஆளும் திமுக தரப்பு இன்று டெல்லியில் புகார் வைக்க உள்ளது. இந்த புகாரில் முக்கியமான சில பாயிண்டுகளை அக்கட்சி குறிப்பிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் ஆர். என் ரவிக்குக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு தரப்பும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விஷயங்களில் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஆளுநரின் பேச்சுக்கள்
முக்கியமாக நியாமான பதவியில் இருக்கும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பற்றியும், கொள்கைகள் பற்றியும் பேசி வருவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஆளுநர் அரசியல் கொள்கைகளை பற்றி பேசுவதுதான் திமுகவின் கோபத்திற்கு காரணம் ஆகி உள்ளது. இந்துத்துவா குறித்தும், சானதானம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.

பதவி நீக்கம்
இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் எம்பி வில்சன் ஆளுநரை நீக்க தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் ஆளுநர் பற்றி புகார் வைக்க திமுக தரப்பு முடிவு செய்துள்ளது. திமுக எம்பி, நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளனர். இதில் ஆளுனர் ஆர். என் ரவிக்கு எதிராக 4 புகார்களை திமுக தரப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் செய்த 4 விஷயங்களை குறிப்பிட்டு அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் புகார் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான லிஸ்டும் தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த லிஸ்ட் பின்வருமாறு

லிஸ்ட்
சரவெடி 1 - தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. ஆளுநர் ஆர். என் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுக்க திமுக புகார் வைக்க உள்ளது.
சரவெடி 2 - ஆளுநர் ஆர். என் ரவி முதல்நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். அவர் இதன் மூலம் சட்டசபை வரம்புகளை மீறியதாக புகார் வைக்க உள்ளது.

சனாதனம்
சரவெடி 3- ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பயிற்சி விழாவில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, மத்திய மாநில அரசுக்கு இடையில் மோதல் வந்தால் மத்திய அரசு பக்கம் நிற்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதும் சர்ச்சை ஆனது. ஆனால் மாநில பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசு சொல்வதை கேட்க வேண்டும் என்பதே விதி. இதற்கு எதிராக ஆளுநர் ரவி பேசியதை பற்றியும் புகார் வைக்க உள்ளனர்.
சரவெடி 4 - சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவில் பேசிய ஆர். என் ரவி, இந்தியாவின் ஆன்மீக அடையாளம் ராமர். இந்தியாவை இணைத்தது ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராமர்தான் இந்தியாவை ஆன்மிகம் மூலம் இணைத்தார். இந்த நாட்டை ஒன்றும் ஆட்சியர்கள் உருவாக்கவில்லை. வலிமைமிக்க ஆட்சியர்கள் இணைந்து ஒன்றும் இந்த நாட்டை உருவாக்கவில்லை. இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து துறவிகள், ரிஷிகள், முனிவர்கள் சேர்ந்துதான் உருவாக்கினார்கள்.

கொள்கை
நாம் எல்லோரும் ஒரே பாரதம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த பாரதம் சனாதன தர்மத்தால் இயங்கி வருகிறது. இந்தியா இணைந்தது சனாதன தர்மத்தால் மட்டும் சாத்தியம் ஆனது. இந்தியா பக்திமயமான நாடு. இதில் இசையும் ஒரு சக்தி மிக்க பக்தி என்பதை மறக்க கூடாது. இந்த பாரத நாடே ராமரை விரும்புகிறது. நமது நாடு புண்ணிய பூமிகளால் கோர்க்கப்பட்டது. திருவையாறு இப்போதும் கூட புண்ணிய பூமியாக விளங்குகிறது. இந்தியா ரிஷிகளால் உருவாக்கப்பட்ட நாடு என்று சொன்னேன். இந்தியாவை உருவாக்கிய அந்த ரிஷிகளில் ஒருவர்தான் தியாகராஜர். இந்த சனாதனம் தெற்கில் இருந்துதான் உருவானது என்பதை மறக்க வேண்டாம். சனாதன தர்மம் முக்கியமாக தமிழ்நாட்டில்தான் தொடங்கியது. இந்த ஒட்டுமொத்த உலகத்திற்கும் கலாச்சரத்தை சொல்லிக்கொடுத்தது இந்தியா. ஆன்மீகத்தின் தலைமையிடமாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் இதயமாக வேதங்கள் இருக்கின்றன, என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு உள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு குறித்தும் திமுக புகார் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications