எடப்பாடி வைத்த 8 கன்னி வெடிகள்! பொதுக்குழு வழக்கில் மெகா ட்விஸ்ட்.. வழக்கில் இபிஎஸ் வென்றது எப்படி?
சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வென்றுள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி தரப்பு முக்கியமான சில வாதங்களை கோர்டில் வைத்தது. அவர் வைத்த வாதங்கள் இன்று வழக்கில் முக்கியத்துவம் பெற்றது.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது . உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார்.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு ஓ பன்னீர்செல்வமும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீடு
இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று இரண்டு தரப்பிற்கும் தலா ஒரு மணி நேரம் மட்டுமே வாதம் செய்ய கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி 3 மணி நேரம் வாதம் செய்தார். ஓ பன்னீர்செல்வம் 2 மணி நேரம் வாதம் செய்தார். கடந்த வாரமே அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு பெற்றது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கி உள்ளனர்.. பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது

எடப்பாடி வாதம்
இன்று வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வர பின்வரும் வாதங்கள் முக்கிய காரணமாக அமைந்தன.
வாதம் 1 - கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும். பொதுக்குழு முடிவை எதிர்ப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியாது. - இது எடப்பாடி தரப்பு வைத்த புதிய வாதம் ஆகும். இதற்கு முன் இந்த வாதத்தை எடப்பாடி தரப்பு வைக்கவில்லை.
வாதம் 2 - ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது. அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறானது.

தவறான தீர்ப்பு
வாதம் 3 - ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது. அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறானது.
வாதம் 4- கட்சி விவகாரங்களில் தலையிடும் விதமாக தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும்.

கட்சி விதிகள்
வாதம் 5 - அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை
வாதம் 6- கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டுமென 2 ஆயிரத்து 539 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. தொண்டர்களுக்கு அதிகாரம் இல்லை.

கோரிக்கை
வாதம் 7 - மனுதாரர்கள் தரப்பில் கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதாரணமானது. கோரப்படாத ஒரு கோரிக்கையை உயர் நீதிமன்றம் எப்படி நிறைவேற்ற முடியும்.
வாதம் 8 - பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் தெரிவிக்கவில்லை. பொதுக்குழுவிற்கு கட்டாயம் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை.

எடப்பாடி மிஸ் செய்த வாதம்
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் முக்கியமான வாதம் ஒன்றை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுக்குழுவை எப்படி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டினார்கள் என்று வாதம் வைக்கவில்லை. அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக அவர்கள் வாதம் வைக்கவே இல்லை. இதற்கு முன் தனி நீதிபதி இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்த முறை இரட்டை நீதிபதிகள் முன் அந்த வாதத்தை எடப்பாடி வைக்கவே இல்லை. இருப்பினும் இன்றைய வழக்கில் எடப்பாடி தரப்பு வென்றுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications