Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ராயல் ப்ளான்".. ஸ்டாலின் கனவு நனவாகுதே.. "தி.நகர் ஆகாய மேம்பாலம்".. இவ்வளவு ஸ்பெஷாலிட்டிகளா.. செம்ம

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலை சந்திப்புக்கு நடந்து செல்லும் வகையில் ரூ.23 கோடி செலவில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.. முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.. இந்த மேம்பாலத்தில் என்னென்ன ஸ்பெஷாலிட்டிகள் உள்ளதென்று பார்ப்போமா?!!

சென்னையில் மிகவும் பரபரப்பான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மிகவும் முக்கியமானது தி.நகர் பகுதியாகும்.. சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்குள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

Are these advantages of chennai tnagar new flyover and what are the specialities

தி.நகர் மேம்பாலம்: அது மட்டுமின்றி சென்னை புறநகர் பகுதியில் இருந்து தி.நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதியாக தி.நகர் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேம்பாலங்கள் அழகுபடுத்துதல், புதிய மேம்பாலங்கள் அமைத்தல், பூங்காக்களை சீரமைத்தல், நீரூற்றுகள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில்தான், சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 வருடங்களுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

Are these advantages of chennai tnagar new flyover and what are the specialities

ஆகாய மேம்பாலம்: தியாகராய நகருக்கு வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில், இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது.. ஆனால், திடீரென கொரோனா தாக்கம் அதிகமாகிவிடவும், இந்த பணிகள் எல்லாம் தாமதம் ஆனது.. பிறகு, மறுபடியும் பணிகள் துரிதமாக நடந்தன.

நடைபால பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் அவ்வப்போது பார்வையிட்டு வந்தார்.. பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபடியே இருந்தார்.. அதுமட்டுமல்லாமல், இந்த நடை மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதை வியாபாரிகள் இதை ஆக்கிரமித்துள்ளார்களா? என்பதை கண்டறியவும் அதிகாரிகள் தினமும் ஆய்வு மேற்கொண்டனர்.

மஞ்சள் பெயிண்ட்: மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட இந்த பாலம் வழியாக பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலையை அடைய முடியும். மேற்கூரைகள் அமைத்தல், கைப்பிடிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன.. இறுதிக்கட்ட பணிகளாக நடைமேம்பாலத்தின் உட்புற பகுதிகளில் உள்ள தூண்களில் வர்ணம் பூசப்படுவது மட்டுமே நடைபெறாமல் இருந்தது.. அந்த பணியும் நடந்து முடிந்துள்ளது..

தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்களும், படிக்கட்டுகளில் வர்ணங்களும் பூசப்பட்டது.. அதேபோல, ஆகாய நடை மேம்பாலத்தின் அருகில் உள்ள மரங்களில் வண்ணப் பறவைகளின் உருவங்களும் வரையப்பட்டுள்ளது.. இந்த நிலையில், அடுத்த வாரம் இந்த ஆகாய நடை மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

Are these advantages of chennai tnagar new flyover and what are the specialities

பஸ் ஸ்டாண்டு: மேலும், இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தியாகராய நகர் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதியில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் உஸ்மான் சாலையில் தலா ஒரு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க முடியும்.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பாதையை உள்ளடக்கும் இந்த மேம்பாலமானது, நகரும் படிக்கட்டுகளுடன் பொதுமக்கள் அதிக அளவு நடப்பதற்கு ஏற்ற அகலத்துடன் கட்டப்பட்டு உள்ளது.

கடைகள்: இந்த ஆகாய நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது... அதேபோல, மேம்பாலம் கட்டியுள்ள வழியில் நிறைய கடைகள், காவல் நிலையம், காய்கறி சந்தை என்று பல அமைந்திருக்கிறது.. மக்கள் இந்த வழியை அணுகும்போது, இடையில் உள்ள கடைகளை பயன்படுத்திக்கொள்வார்கள் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+