அசைண்மெண்ட்டை மாற்றி அண்ணாமலைக்கு தந்த அமித்ஷா! நயினார் நாகேந்திரன் தலையில் பெரிய பொறுப்பு? பாஜக செம
சென்னை: அண்ணாமலையை கழட்டிவிட்டுவிட்டார்கள் என்றெல்லாம் சில யூடியூப்களில் பேசுகிறார்கள்.. அமித்ஷா, மோடி என யாராக இருந்தாலும் சரி, பாஜகவுக்குள் வந்த யாரையுமே கழட்டி விட மாட்டார்கள்.. மாறாக, இதுபோன்றவர்களுக்கு பொறுப்புகளைதான் அதிகம் தருவார்களே தவிர, எக்காரணம் கொண்டும் உதாசீனப்படுத்த மாட்டார்கள்" என்று மூத்த அரசியல் விமர்சகர் அய்யநாதன் பேட்டியொன்றில் கருத்து கூறியிருக்கிறார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகவுடையது என்று உறுதியாக சொல்ல முடியாது.. அப்படியிருந்தால் எல்லா தேர்தலிலும் அதிமுகதானே வென்றிருக்கும்? ஏன் தோற்றது? மாறி மாறிதான் வெற்றி பெற்றுள்ளனர்.. எனவே இங்கு அரசியல்தான் தீர்மானிக்கிறது..

ஓபிஎஸ், டிடிவிக்கு செல்வாக்கு இருப்பதை போல, ஸ்டாலினுக்கும் தென்மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. அதேபோல கொங்குமண்டலம் அதிமுக கோட்டை என்கிறார்கள்.. அப்படியானால் உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது?எம்பி தேர்தலில் என்ன நடந்தது? எனவே எந்த கட்சியாக இருந்தாலும், அந்தந்த தொகுதிக்கு செய்யும் நலத்திட்டங்கள், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது இவைகளை வைத்துதான் வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன.
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
அரசியலில் பாஜகவை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.. அமித்ஷாவை சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டு வந்த பிறகு, பல விஷயங்கள் அவர்களுக்குள் செட்டில் ஆகிவிட்டன.. குறிப்பாக தொகுதி பங்கீடு.. ஆனால், இதை அவர்கள் வெளியே சொல்லவில்லை..
ஏனென்றால், இதை அறிவிக்க வேண்டியது அமித்ஷாதான்.. தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வந்து, தொகுதி எண்ணிக்கையை அறிவிக்கும்போது, எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதையும் சேர்த்து அறிவிப்பார். எனவே தொகுதி விவகாரங்கள் அவர்களுக்குள் பேசி முடித்தாகிவிட்டது.
அண்ணாமலைக்கு அசைன்மென்ட்
அதேபோல அதிமுகவை எடப்பாடி பழனிசாமி எப்படி வேண்டுமானாலும் வழிநடத்தி செல்லட்டும், ஆனால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை தான் பார்த்து கொள்வதாக அமித்ஷா சொல்லி உள்ளார்.. ஏனென்றால், அவர்கள் அத்தனை பேரிடமும் ஓட்டு வங்கி உள்ளது.. அதனை இழக்க முடியாது. இதனால்கூட்டணியும் சேர்ந்து தோற்கும்.. அதனால்தான் அதிமுகவை டீல் செய்யும் பொறுப்பை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்துள்ளார் அமித்ஷா,.. எனவே இது தொடர்பாக எடப்பாடியிடம் நயினார்தான் பேசுவார்.
அதேபோல NDA கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர்களை ஒன்றிணைக்கும் அசைன்மென்ட், அண்ணாமலையிடம் தரப்பட்டுள்ளது.
நயினாருக்கு தரப்பட்ட ஒர்க்
இப்படி தனித்தனியாக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன., இவர்கள் 2 பேரும் அமித்ஷாவிடம் தங்களது ரிப்போர்ட்டை அளிப்பார்கள்.. டிடிவி தினகரனை பொறுத்தவரை, 2019-ல் 22 லட்சம் ஓட்டுக்களை வாங்கி நிரூபித்தவர்..
2021-ல் தென்மாவட்டங்களில் அதிமுக தோற்ற பல இடங்களில் தோற்ற வாக்கு வித்தியாசத்தைவிட, அதிக வாக்குகளை டிடிவி பெற்றிருந்தார்.. இதைத்தான் பாஜக கணக்கில் எடுத்து கொள்கிறது. மற்றொருபுறம் ஓட்டுவங்கியுள்ள ஓபிஎஸ்ஸையும் கணக்கில் கொள்கிறது.. இவர்களெல்லாம் NDA கூட்டணிக்கு வலிமையானவர்களாக பாஜக கருதுகிறது..
எனவேதான் அந்த பணி அண்ணாமலையிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.. ஆனால் அண்ணாமலையை கழட்டிவிட்டுவிட்டார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள்.. அமித்ஷா, மோடி யாராக இருந்தாலும், யாரையுமே அப்படி கழட்டி விட மாட்டார்கள்.. இதுபோன்றவர்களுக்கு பொறுப்புகளைதான் அதிகம் தருவார்களே தவிர, உதாசீனப்படுத்த மாட்டார்கள்..
விஜயதாரணிக்கு விரைவில் குட்நியூஸ்?
ஒருமுறை பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை கொண்டுவருவதற்கு முயற்சி நடந்தது.. இதற்காக முன்னெடுக்கப்பட்ட "என் மண் என் மக்கள்" பயணத்திற்காக ரூ.180 கோடி கட்சி செலவு செய்யப்பட்டதாக பாஜக வட்டாரத்திலிருந்தே கேள்விப்பட்டேன். ஆனால், பலன் பெரிதாக தரவில்லை.. கட்சி தலைவராகவும் உருவாக்க முடியவில்லை. எனினும், அண்ணாமலையால் கட்சி பலனடைந்துள்ளதால், அதை பாஜக லேசில் விட்டுவிடாது..
இப்போது விஜயதாரணி அதிருப்தியில்தான் இருக்கிறார்.. ஆனால், அவருக்கும் கூடிய சீக்கிரம் பாஜக பொறுப்பை தந்துவிடும்.. தங்களை நாடி வந்தால் பொறுப்பு, பதவி தருவார்கள்.. ராதிகா சரத்குமாரை தேர்தலில் நிற்க வைக்கவில்லையா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications