ஆப்பு வெச்சாச்ச.. நள்ளிரவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை? அப்ப பகலில் இதுதான் நேரமா? அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் புதிய பரிந்துரைகளை செய்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் குறித்து, சில ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
நம்முடைய தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமே ஆன்லைன் சூதாட்டத்தின் பிடியில் எத்தனையோ பேர் சிக்கி வருகிறார்கள்.. இந்த சூதாட்டத்தில், பணத்தையும் இழந்து, நிம்மதியையும் இழந்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையும் செய்து கொள்வது ஜீரணிக்க முடிவதில்லை.

இந்த தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது... தமிழகத்தில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.. அதனால்தான், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இரவில் தடைவிதிப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தற்கொலைகள்: தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் புதிய பரிந்துரைகளையும் இதற்காகவே செய்திருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, தமிழக அரசு இந்த ஆணையத்தை அமைத்து, தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறது.
அந்தவகையில், ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? சிறுவர்-சிறுமிகளை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கலாம்? என்பது போன்ற ஆலோசனைகள் தமிழக அரசிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அந்த பரிந்துரைகள் இவைகள்தான்:
ஆன்லைன் விளையாட்டு: "நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கலாம். ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலுத்தி விளையாடும் வகையில் திருத்தங்களை செய்யலாம். சுமார் ஒன்றரை லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலர் தங்களது பெற்றோர்களின் செல்போன்களையே ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இப்படி குறிப்பிட்ட நேரம் தான் விளையாட முடியும் என்பதை கொண்டு வந்து விட்டால் நிச்சயமாக ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிகமாக நேரத்தை செலவழிப்பது குறையும். சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருப்பது போன்று விளையாடும் நேரம் மற்றும் பணப் பரிமாற்ற தகவல்களை செல்போன்களுக்கு அனுப்பும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இது பொருந்துமா: எனினும் இதுகுறித்த அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்று தெரியவில்லை.. ஒருவேளை, மேற்கண்ட இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும்கூட,
பணம் கட்டாமல் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என்று ஆன்லைன் விளையாட்டு தடுப்பு வல்லுநர்கள் கருத்து கூறி வருவதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications