"பச்சை சிக்னல்".. சைஸா என்ட்ரி ஆகிறதா பாஜக.. அப்ப எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா.. இதான் கிளைமாக்ஸ்?
எடப்பாடி பழனிசாமிக்கு என்னென்ன வாய்ப்புகள் கையில் உள்ளன என்ற விவாதம் எழுந்துள்ளது
சென்னை: அதிமுகவில் விவகாரம் முற்றி உள்ள நிலையில், கோர்ட் உத்தரவு ஒன்றையே இறுதியாக நம்பி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்க போகிறார்? இதுதான் தற்போதைய விவாதமாக களத்தில் நடந்து வருகிறது...!
Recommended Video
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள்தான் கடந்த ஒரு வாரமாகவே அதிமுகவுக்குள் வட்டமடித்து வருகிறது.. இது ஓபிஎஸ் தரப்பில் இருந்து மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் கூடாரத்துக்குள்ளிருந்தும் முணுமுணுப்புகளும் சலசலப்புகளும் எழ ஆரம்பித்துள்ளதாம்..
அதற்கேற்றபடி, "ஒன்றாக பயணிப்போம், சேர்ந்தே கட்சியை வழிநடத்துவோம், அன்புசகோதரர்" என்றெல்லாம்தான் பாசமான வார்த்தைகளை ஓபிஎஸ் உதிர்த்தும், எடப்பாடி அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

கோபம்
அப்பீலுக்கு சென்றுள்ளதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடியின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.. அன்று நடத்திய பொதுக்குழுவில், அவசரப்பட்டு ஏடாகூடமான தீர்மானங்களை நிறைவேற்றி, இன்று எக்கச்சக்கமான சட்ட சிக்கலில் எடப்பாடி மாட்டிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதனால்தான் ஒருபக்கம் சிவி சண்முகத்தை டோஸ் விட்டுக்கொண்டே, மறுபடியும் வழக்கறிஞர்களுடன் மும்முர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.. நீதிமன்ற தீர்ப்பு எதுவானாலும், அதை விமர்சிக்காமல், அந்த உத்தரவை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது, இயல்பான ஒன்றுதான்.

பச்சை சிக்னல்
அதேசமயம், எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலம் என்னாகும்? அவர் எந்த மாதிரியான முடிவை எடுக்க போகிறார்? என்ற விவாதமும் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடிக்கு, ஓபிஎஸ் அழைப்பு விடுப்பதற்கு முன்பேயே அவருக்கும் தெரியும், எடப்பாடி எப்படியும் அழைப்பை நிராகரிப்பார், முரண்டு பிடிப்பார்.. அதனால்தான், அழைப்பு விடுத்து, அதற்கு எடப்பாடி மறுப்பு சொன்ன அடுத்த நிமிடமே, யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம் என்று டிடிவி + சசிகலாவுக்கு சிக்னலும் தந்தார்.. பிறகு இந்த சிக்னல் வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார். ஓபிஎஸ் இப்படித்தான் செய்வார் என்பது எடப்பாடிக்கும் முன்னமேயே தெரியும்.

ஆப்ஷன்கள் - மைனஸ்கள்
அப்படியானால், எடப்பாடி முன்பு உள்ள ஆப்ஷன்கள் என்னென்ன? தொண்டர்கள் பலத்துடன்தான் பொதுக்குழுவை கூட்டியதாக சொன்னால், அதற்குரிய அத்தாட்சி எங்கே என்று நீதிமன்றம் கேட்டுள்ளது.. இதற்கு எடப்பாடி இப்போதுவரை ஆதாரத்தையும், பதிலையும் தரவில்லை.. ஆக, சட்டரீதியாகவே நிறைய விஷயங்களில் எடப்பாடி சிக்கி உள்ளதால், ஓபிஎஸ் பக்கம் மட்டுமே, இனி போயாக வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.. அல்லது, தனக்கிருக்கும் ஆதரவாளர்களை கையில் வைத்துக் கொண்டு, கட்சியை உடைத்துவிட்டு, வெளியே வருவதுதான்..

பாஜக என்ட்ரி
ஓபிஎஸ் பக்கம் சென்றால், கட்சிக்காக இறங்கி வந்துவிட்டார் என தொண்டர்களும் எடப்பாடியை ஏற்பார்கள்.. தன்னுடைய பழைய பதவியும் கையைவிட்டு போகாது.. இரட்டை இலையும் கைவிட்டு போகாது.. ஒருவேளை கட்சியை உடைத்துக் கொண்டு சென்றால், இலை முடங்கிவிடும்.. இதுதான் பாஜக ரூட்.. இந்த சமயத்தில்தான் பாஜக என்ட்ரி தரும்.. பாஜக இந்த விஷயத்தில் தலையிடும்போது, ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி இவர்கள் 3 பேரு ஒரே அணியில் இணைந்திருக்கவே செய்வார்கள்..

சாய்ஸ்கள்
எனவே, நீதிமன்றம் சாதகமான உத்தரவை வழங்காவிட்டால், எடப்பாடிக்கு இப்போதைக்கு இந்த 2 வழி மட்டுமே இருப்பதாக சோஷியல் மீடியாவில் விவாதங்கள் நடந்து வருகின்றன.. இதற்கு நடுவில் ஓபிஎஸ் தரப்பில், எடப்பாடி பழனிசாமி டீம் குறித்த டேமேஜ்களையும், பரவ விட துவங்கி உள்ளனராம்.. யாரை பார்த்து பதவி ஆசை என்கிறார் எடப்பாடி பழனிசாமி? ஓபிஎஸ்ஸுக்கா பதவி ஆசை? 5 வருடஆட்சியில், ஓபிஎஸ்ஸை எந்த அளவுக்கு இவர் மட்டமாக நடத்தினார் என்பதை நாடறியும்..

இணக்கம் + பிணக்கம்
தலைமை நிலைய செயலாளரும் எடப்பாடியே.. மாவட்ட செயலாளரும் எடப்பாடியே.. முதல்வர் வேட்பாளரும் எடப்பாடியே.. எதிர்க்கட்சி தலைவரும் எடப்பாடியே.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் எடப்பாடியே.. இவ்வளவையும் அனுபவித்துவிட்டு, கடைசியில் பதவி ஆசை என்று ஓபிஎஸ் மீது பழியை போடுகிறாரே.. சசிகலாவால் தவழ்ந்து பதவிக்கு வந்து, சசிகலாயே யார் என்று கேட்டவரை, இந்த தமிழக மக்கள் நன்கே அறிந்து வைத்துள்ளனர்.. அதிமுக நலனுக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும், இணக்கமாகவும், பிணக்கமாகவும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டவர் யார் என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்ற விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனராம்..!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications