யாரையும் விடாதீங்க.. அமுதா ஐஏஎஸ் உள்ளே வந்ததும்.. ஸ்டாலின் தந்த மெகா டாஸ்க்.. ஆரம்பமே எகிறிய பிரஷர்!
சென்னை: தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.
மோசம்: இந்த நிலையில் டாஸ்மாக்கில் மலிவான விலையில் எளிதாக கள்ளச்சாராயம் கிடைக்கும் நிலையிலும் கூட தமிழ்நாட்டில் திடீரென கள்ளச்சாராய பயன்பாடு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்!, என்று குறிப்பிட்டு உள்ளார்.

நீக்கம்: தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து நேற்று கள்ளச்சாராய விவகாரம் காணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு ஏற்று உள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு ஏற்று உள்ளார்.
தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டாஸ்க்: இந்த நிலையில்தான் தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வேண்டும். அதிகாரிகள் உடனே துரிதமாக செயல்பட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டால் அவர்கள் மீது அமுதா ஐஏஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்துறை அமைச்சகம் இதில் மிக விரைவாக செயல்பட வேண்டும். கள்ளச்சாராய உற்பத்தி குறித்து உளவுத்துறையும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் துறை ரீதியாக உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அமுதா ஐஏஎஸ்: அமுதா ஐஏஎஸ் சமீபத்தில்தான் உள்துறைக்கு கொண்டு வரப்பட்டது மிக பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த 2021ம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த அமுதாவை விடுவித்து அதற்கான ஆணையை சமீபத்தில் பிறப்பித்திருந்தது மத்திய அரசு.
மாநில அரசு இவரை மீண்டும் கேட்டதாக அப்போதே செய்திகள் வந்தன.
அதனடிப்படையில், மாநில பணிக்கு திரும்பும் அமுதா, எந்த துறையில் நியமிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அப்போதே இருந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது.
மாற்றம் இல்லை: அப்போது வேறு வழியின்றி அவருக்கு தற்காலிகமாக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது உள்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. உள்துறை என்பது முதல்வர் ஸ்டாலினின் துறை. ஸ்டாலினின் டீமிற்கு வந்து இருக்கும் அமுதாவுக்கு முக்கியமான சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி கீழ் சென்னையில் கொஞ்சம், கொலை சம்பவங்கள் அதிகரித்தன. 2ம் கட்ட நகரங்களிலும் கிரைம்கள் அதிகரித்தன. இதை எல்லாம் கட்டுபடுத்த வேண்டும் என்ற உத்தரவு சென்றுள்ளதாம்.
-
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு











Click it and Unblock the Notifications