பஞ்சு பஞ்சா போகுமே "பிளான்கள்"?.. சிக்கலே இனிமேதான்.. ஆமா, "அந்த" விஷயத்தை சமாளிப்பாரா எடப்பாடியார்?
சென்னை: அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று, கட்சியை தன்வசமாக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதனால் அதிமுகவின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்து காணப்படுகின்றனர்.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமிக்கான பொறுப்புகள் இந்த நிமிடம் முதல் அதிகரிக்கவும் துவங்கி விட்டது.
மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு பேட்டியில் சொல்கிறார்.. "எடப்பாடி பழனிசாமி என்பவர் அகில இந்திய தலைவர் கிடையாது.. ஆண்டிப்பட்டியில் எடப்பாடி ஜெயிப்பாரா? மதுரை மேற்கில் நின்று ஜெயிப்பாரா? தர்மபுரியில் ஜெயிப்பாரா? அவர் மாவட்டத்தில் மட்டும் தான் அவரால் ஜெயிக்க முடியும்..
காரணம் இவர் பகுதி தலைவர்.. ஓபிஎஸ்ஸுக்கும் இது பொருந்தும்.. அவரும் சேலத்தில் நின்று ஜெயிக்க முடியாது.. ஆக, இவர்கள் எல்லாருமே பகுதி தலைவர்கள்தான்..

முளைத்த முடிச்சு
எடப்பாடி பழனிசாமி என்பவர் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போட்டியிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தமிழகம் தழுவிய தலைவர்களாக தங்களை தாங்களே நிரூபித்து விட்டனர்.. எடப்பாடி பழனிசாமி இன்னமும் நிரூபிக்க வேண்டி இருக்கு.. ஆனால் அதுக்குள்ளேயே, ஒற்றை தலைமை விவகாரம் எதற்காகவென்று தெரியவில்லை.. அதிமுகவின் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்காக மட்டுமே என்று நான் நினைக்கிறேன்" என்று தராசு ஷ்யாம் சொன்னதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. காரணம், இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்ட நிலையில், சிக்கல்களும் இனி நிறைய எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிக்கல் 1
முதலாவதாக, சட்டரீதியாக அதிக அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தார் ஓபிஎஸ்.. சமீபகாலமாகவே, எடப்பாடிக்கு ஆதரவாக உத்தரவுகள் ஒவ்வொன்றாக வருவதை கண்டு, மூத்த தலைவர் பண்ருட்டியே அதிர்ந்துவிட்டாராம்.. எடப்பாடிக்கு சாதகமாக வரும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டு, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனே அதிர்ந்து போய்விட்டாராம்.. "எல்லாம் தலைகீழாக போகுதே" என்று ஓபிஎஸ் டீம் நொந்து கொண்டதாம்.. இப்போதும் அதே சட்டத்தை பலமாக நம்பி உள்ள நிலையில், கட்சிக்குள் தனி ஆவர்த்தனத்தை இனி ஓபிஎஸ் கையில் எடுப்பார் என்றும், இதனால் குழப்பங்கள் பல வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. ஓபிஎஸ் தனிகட்சி துவங்குவாரா? அல்லது பாஜகவுடன் இணைவாரா? என்பது தெரியவில்லை.. ஆனால், இந்த இடத்தில் "பாஜகவின் தந்திரமும்" கைகொடுக்கும்போது, இவையாவும் எடப்பாடிக்கு தலைவலியை உண்டுபண்ணவே செய்யும் என்கிறார்கள்.

சிக்கல் 2
இரண்டாவதாக, அதேபோல, நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில், பலம்வாய்ந்த கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடி பழனிசாமி மண்ணை கவ்வியுள்ளார்... சமீபகாலமாகவே, எடப்பாடி பழனிசாமி பக்கம் காற்று சாதகமாக வீசிவருகிறது என்றாலும், போதுமான வெற்றியை அவர் நிரூபிக்கவில்லை என்ற கருத்தே அழுத்தமாக வேரூன்றப்பட்டு வருகிறது.. எப்போதுமே திமுகவைவிட, அதிமுகவுக்கு பலமே அதன் வாக்கு வங்கிதான்.. அப்படிப்பட்ட வாக்கு வங்கி, இப்போது 25-லிருந்து 20ஆக குறைந்துள்ளதாக தெரிகிறது.. இத்தனைக்கும் இடைத்தேர்தலின்போது எடப்பாடிக்கு, இலை சின்னம் கிடைத்தாகிவிட்டது..

இலை தலை
ஓபிஎஸ் தரப்பும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி வழிவிட்டது.. வழக்கமாக அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும், அமமுகவும் ஒதுங்கி கொண்டது.. இது எல்லாவற்றையும்விட, எடப்பாடிக்கு சாதகமான தேர்தல் களம், சொந்த மண்ணில் அமைந்தது. சொந்த சாதி வாக்குகள் இருந்தும்கூட, வெறும் 40 ஆயிரம்தான் ஓட்டுக்கள் என்பதைதான் பலராலும் ஜீரணிக்க முடியவில்லையாம். ஒருவேளை ஈரோடு கிழக்குக்கு பதிலாக தென்மாவட்டங்களில் இடைத்தேர்தல் வந்திருந்தால், எடப்பாடி எவ்வளவு ஓட்டு பெற்றிருப்பார்? என்ற கேள்வியும் எழவே செய்தது..

சிக்கல் 3
அதுமட்டுமல்ல, எடப்பாடிக்கு கிடைத்த இந்த 40 ஆயிரம் ஓட்டுக்களும், எடப்பாடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த ஓட்டுக்களாகவும் கருத முடியாது என்கிறார்கள். அந்த 40 ஆயிரம் ஓட்டுக்களில், ஓபிஎஸ்ஸுக்கும் பங்கிருந்தது.. பாரிவேந்தருக்கும் பங்கிருந்தது.. கிருஷ்ணசாமிக்கும் பங்கிருந்தது.. வாசனுக்கும் பங்கிருந்தது.. பாஜகவுக்கும் பங்கிருந்தது.. ஜான்பாண்டியனுக்கும் பங்கிருந்தது.. இவ்வளவு பேரும் சேர்ந்துதான், வெறும் 40 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன.. இதையடுத்துதான், அதிமுக சீனியர்கள் பலரே அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாகவும், ஒருங்கிணைந்த அதிமுக என்பது அவசியம் என்பதை இந்த இடைத்தேர்தல் பறைசாற்றி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது..

சிக்கல் 4
அடுத்ததாக, தமிழக அரசியல் களத்தில் திமுக Vs அதிமுக மட்டுமே இருக்கும் என்பது இன்று நிரூபணமாகியுள்ளதுடன், உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதையும், பாஜகவுக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. எந்தவிதமான நெருக்கடியும் நிர்ப்பந்தமும் அழுத்தமும் இல்லாமல் கட்சியை, தன் தலைமையில் நடத்த வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் விருப்பமாக உள்ள நிலையில், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் பாஜக வேண்டுகோள் விடுத்து வருவதும், எடப்பாடிக்கு குடைச்சலையே தந்து வருகிறது..

13%
ஏற்கனவே கடந்த தேர்தல்களில் கிட்டத்தட்ட 13 சதவீத சிறுபான்மையினர் அதிமுகவை விட்டு வெளியேறியதற்கு பாஜகதான் காரணம் என்பதை எடப்பாடி அழுத்தமாக நம்பி வரும்நிலையில், பாஜக அல்லாத கூட்டணி என்ற விஷயத்தையும் கையில் எடுக்கலாம்.. ஆனால், பாஜகவை முற்றிலும் தவிர்த்துவிடுவது அதிமுகவுக்கே பலவீனமாகிவிடும் என்கிறார்கள். கடந்த 2019-ல் இருந்தே பாஜகவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்பட்டு வருவதை கண்கூடாக காண்கிறோம்.. அந்தவகையில்தான் இப்போதும்கூட, பாஜகவைவிட்டு எந்தநிலையிலும் எடப்பாடியால் வெளியே வர முடியாத நிலைமைதான் உள்ளது.. அப்படியே வெளியே வந்தால் கொங்கு மண்டல அதிமுகவில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டுவிடும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சிக்கல் 5
அடுத்தபடியாக, கட்சிக்குள்ளேயே சீனியர்கள் பொருமலில் உள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. இதைத்தவிர மூத்த தலைவர்கள் அன்வர் ராஜா முதல் கேசி பழனிசாமி வரை எத்தனையோ பேர் மனத்தாங்கலில் உள்ள நிலையில், அனைவரையும் எப்படி சரிக்கட்டி, சமாளித்து ஒன்றிணைக்க போகிறார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. அதுமட்டுமல்லாமல், மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே, எந்தவிதமான "சாதி"அடையாளத்தையும் பூசிக்கொள்ளாமல், அனைவருக்குமான தலைவர்களாக, தங்களை நிரூபித்து விட்டு சென்றுள்ள நிலையில், தன் மீதான "அடையாளத்தை" எப்படி எடப்பாடி மாற்ற போகிறார்? என்பதும் ஆர்வமாக உள்ளது.

சிக்கல் 6
இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. எந்த ஒரு கட்சி தலைவருக்குமே "அரவணைப்பு" என்பது அவசியமான அடிப்படை பண்பாக உள்ள நிலையில், தனக்கு ஓபிஎஸ்ஸும் வேண்டாம், சசிகலாவும் வேண்டாம், தினகரனும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம், என்று ஒவ்வொருவரையும் நிராகரித்து வருவது, எத்தகைய பலத்தை எடப்பாடிக்கு பெற்று தரப்போகிறது? விடாமுயற்சியாலும், பிடிவாதத்தாலும், தன்னம்பிக்கையினாலும், கட்சியை தன்வசம் "தற்சமயம்" கொண்டுவந்துவிட்டாலும், எத்தனை காலத்துக்கு எடப்பாடி பழனிசாமி கட்சியை தன்வசம் தக்க வைக்க போகிறார்? அதிருப்தியே இல்லாத தலைவராக உருவெடுப்பாரா எடப்பாடி?.. பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications