அசையும் "பாஜக" அஸ்திவாரம்.. "இவர்"தான் கூட்டணி தலைவரா? நாட்டின் கவனத்தை மொத்தமா குவித்த "இந்தியா"
சென்னை: இன்று இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாட்டு மக்களின் மொத்த கவனமும், மும்பையில் குவிந்துள்ளது.. இந்தியா கூட்டணியின் தலைவர் யார் என்பது குறித்த அனுமானங்களும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.
பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று, முதன்முதலில் முனைப்பு காட்டியதே மூத்த தலைவர் சந்திரபாபு நாயுடு தான்.. அதற்கான முயற்சியையும் கடந்த 2019-ல் எம்பி தேர்தலின்போது எடுத்திருந்தார்.. தேசிய தலைவர்கள் ஒவ்வொருவராக சந்தித்து பேசி ஆதரவும் கேட்டு வந்தார் சந்திரபாபு நாயுடு..

பெரும்பான்மையான தலைவர்களும் அவருக்கு ஆதரவை தந்தனர்.. ஆனால் பிரதமர் வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அந்த கூட்டணி திட்டம் அப்போதே கைவிடப்பட்டுவிட்டது.
மம்தா பானர்ஜி: இதற்குபிறகு, அதே முயற்சியை மம்தா பானர்ஜி கையிலெடுத்தார்.. அவரும் ஒவ்வொரு தலைவராக சந்தித்து பேசிய நிலையில், காங்கிரஸ் மேலிடத்துடன் "முட்டிக்கொண்டார்"..
ஆனால், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைவதற்குள், பாஜக, விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுவிட்டது. இப்போது, விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக கூட்டணியை எதிர்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, "இந்தியா" என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இன்று கூட்டம்: இந்த கூட்டணியின் 2 கூட்டங்கள் ஏற்கனவே நடந்த முடிந்த நிலையில், இன்றும், நாளையும் மும்பையில் 3வது கூட்டம் நடக்க போகிறது.. பாஜகவுக்கு இந்த கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதேசமயம், இந்த கூட்டத்தின் நோக்கம் என்ன? என்பது குறித்தும் மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.
இன்று நடக்க போகும் கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசித்து முடிவு எட்டப்படலாம் என்கிறார்கள். ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், வெற்றி பெற்ற எம்பிக்கள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வார்கள் என்றும் காங்கிரஸ் தரப்பில் சொல்லிவிட்டார்கள்.
தொகுதி பங்கீடு: அப்படியானால், எம்பி தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் என்கிறார்கள். ஆனால், தொகுதி பங்கீட்டில் கட்சிகளுக்கு இடையே எந்த போட்டியும் இல்லை என்று காங்கிரஸ் இதற்கும் விளக்கம் தந்திருந்ததால், இதற்கான சாத்தியமும் இன்றைய தினம் இருக்குமா? என்று தெரியவில்லை.
அப்படியானால், இந்தியா கூட்டணிக்கு யார் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்? என்று அறிவிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அப்படி அறிவித்தால், அந்த ஒருங்கிணைப்பாளர் யார் என்பதை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியே தெரிவிக்கக்கூடும்.. மேலும், 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இன்றைய தினம் கட்டமைக்க உள்ளதால், இதில் முக்கியமான கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிகிறது.
ஒருங்கிணைப்பு குழு: அதுமட்டுமல்ல, இன்று தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பு குழு மீதான எதிர்பார்ப்புதான் பெருகியபடியே உள்ளது.. காரணம், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் இவர்கள்தான் வழிகாட்டியாக இருப்பார்கள், இவர்கள்தான், எம்பி தேர்தல் முடியும்வரை, இந்தியா கூட்டணியின் ஆணிவேராக இருந்து செயல்படுவார்கள் என்பதால், வழிகாட்டி குழுவின் மீதே நாட்டு மக்களின் மொத்த கவனமும் குவிந்துவருகிறது.
தொகுதி பங்கீடு விவகாரம் குறித்தும் பேச்சு எழும் என்றாலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து நிச்சயம் ஆலோசிக்கப்படவுள்ளது.. அத்துடன், குறைந்தபட்ச செயல் திட்டம், தொகுதிப் பங்கீடு, இந்தியா உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விவகாரங்கள் போன்றவைகளிலும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
கேஸ் சிலிண்டர்: அந்த வகையில், இன்று கூட்டம் நடப்பதற்கு முன்பேயே, மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த இந்தியா கூட்டணி ஏற்படுத்தி வருகிறது.. இதை பாஜகவும் உற்று கவனித்தே வருகிறது.. அதனால்தான், 450 ரூபாய் இருந்த கேஸ் சிலிண்டர் விலையை 1100 ரூபாய்க்கு உயர்த்தி பெண்களை வருத்திவிட்டார்கள், அப்போது வராத பாசம் இப்போது ஏன் வந்தது? இந்தியா கூட்டணியைப் பார்த்து பயந்தே, கேஸ் விலையை குறைத்துவிட்டார்கள் என்று சிவசேனா எம்பியான பிரியங்கா சதுர்வேதி கூறியிருந்தார்.
INDIA கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து பயத்தில் பாஜக இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும் என்று மூத்த தலைவர் சரத்பவாரும் கமெண்ட் அடித்திருந்தார்.
உத்தவ் தாக்கரே: "இந்தியா கூட்டணியில் பிரதமராக வர வாய்ப்புள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பாஜகவின் முகமாக ஒருவரை தவிர யார் இருக்கிறார்கள்? கர்நாடகத்தில் தோல்வியடைந்த பிறகு பாஜக, இனி யாரை முன்னிறுத்தும்" என்று உத்தவ் தாக்கரேவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
போதாக்குறைக்கு 4 நாட்களுக்கு முன்பு வந்த கருத்து கணிப்புகளால், பாஜக கடும் அப்செட்டுக்கு ஆளானதாகவும் சொல்லப்பட்டது. அதாவது, "பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியை விட 2 சதவீத ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெறும் என்றும், 2 கூட்டணிக்கு ஆட்சியை பிடிப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கூறியிருந்தது.
கணிப்புகள் : சுருக்கமாக சொல்லப்போனால், பாஜகவின் என்டிஏ கூட்டணி 43 சதவீத ஓட்டுகளை பெறும் என்றும், அதேநேரத்தில் 2 சதவீதம் குறைந்து ‛இந்தியா' கூட்டணி 41 சதவீத ஓட்டுகளையும் பெறும் என்றும் கணிப்புகள் கூறியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
கணிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், உத்தரப்பிரதேசத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலே, 'இந்தியா' கூட்டணிக்கான முதல் சவாலாக கருதப்படுகிறது... அத்துடன், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாறுபட்ட கொள்கை நிலைப்பாடுகளை உடைய பலதரப்பட்ட கட்சிகள் ஒன்றாகக் கூடி, பாஜகவை தேர்தல் களத்தில் சந்திக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆர்வம் : இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸில் இருந்தே கூட்டணியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..
ஆனால், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளில் ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் போன்றவை, ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்த எதிர்ப்பு தெரிவிப்பதால், ராகுல் அல்லாத காங்கிரஸ் தலைவர்களில் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, கூட்டணியின் தலைவராக முன்னிறுத்தவும் மும்பை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்தியா கூட்டணியின் தலைவரே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் முகமாக அறிவிக்கப்படுவார் என்பதால், இந்த கூட்டணியின் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே எகிறி வருகிறது.
தலைவர் யார்: இப்படி தொடர்ந்து, நிலவி வரும் யூகங்களுக்கும், கிளம்பி வரும் சந்தேகங்களுக்கும், இன்றைய தினம் நடக்க போகும் ஆலோசனை கூட்டத்தில் "இந்தியா" என்ன முடிவெடுக்க போகிறது என்று தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications