அரண்ட எடப்பாடி பழனிசாமி.. அதிமுக "மெகா கூட்டணி" இதுதானோ? பாஜக காட்டில் மழைதான் போல.. கவனிக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெகா கூட்டணி என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்ட நிலையில், இன்னும் அதற்கான அறிகுறியே அதிமுகவில் காணவில்லை.. என்ன நடக்கிறது அக்கட்சியில்? காலங்காலமாகவே, ஒவ்வொரு தேர்தலிலும், திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் மோதி வரும் பலமான கட்சிகளாகும்.. கூட்டணி வைத்தாலும்சரி, தனித்து போட்டியிட்டாலும்சரி, தமிழக அரசியலில், இந்த இரு கட்சிகளை முன்னிறுத்திதான், தேர்தல்களம் அமைந்து வருகிறது.

இந்த முறை திமுகவை பொறுத்தவரை, தன் கூட்டணியில் பலமாகவே உள்ளது.. வேண்டுமானால் பிற கட்சிகளை கூடுதலாகவும் இணைத்து கொள்ளலாம். அந்தவகையில், பாமகவும் திமுக கூட்டணிக்கு முயன்றதாக தெரிகிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதற்கு, பிடிகொடுக்கவில்லையாம். பிறகு பார்க்கலாம் என்ற ரீதியில் பாமக தலைமைக்கு பதிலளித்து விட்டதாக தெரிகிறது.

Are these the parties that will be included in the ADMK alliance and whats Edapadi Palanisamy plan

3 சீட்டுக்கள்: அப்படியே கூட்டணியில் இணைவதானாலும், 3 சீட்டுக்கு மேல் ஒதுக்கும் எண்ணம் திமுக மேலிடத்துக்கு இல்லையாம். அதனால்தான், கூட்டணி கதவை திமுக மூடியதாக தெரிகிறது. அப்படியானால், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், இதற்கும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

காரணம், பாமகவை சேர்த்தால், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம், பிற சமுதாயத்தினரின் ஓட்டுகளை வரவிடாமல் தடுத்து விடும் என்று அதிமுக தலைவர்கள் கருதுகிறார்களாம்.. அதனால், பாமகவுக்கு கூட்டணியில் இடமில்லை என்றும், பாமக கேட்கும் அதிக சீட்களை ஒதுக்க முடியாது என்றும் கருதி, அதிமுகவும் பாமகவின் கூட்டணி கதவை மூடிவிட்டதாம்.

பெரிய கட்சிகள்: எனினும், பெரிய கட்சிகள் எதுவுமே கூட்டணியில் இடம்பெறாமல் போனால், இது அதிமுகவுக்கே சிக்கலை தந்துவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அந்தவகையில், பலம்வாய்ந்த திமுகவுக்கு எதிரான கூட்டணியை, எடப்பாடி பழனிசாமி எப்படி கட்டமைக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தமிழகத்தின் 3வது கட்சியாக திகழும், நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக தரப்பு முயற்சிப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

மற்றொருபக்கம், காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் அதிமுக கொண்டுவருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அந்த கணக்கும் நொறுங்கிவிட்டது. நேற்று சோனியா காந்தி, இங்கே வந்து சென்ற நிலையில், காங்கிரஸ் அங்கிருந்து பிரிந்து வர வாய்ப்பேயில்லை என்பது உறுதியாகிவிட்டது.

விசிக கூட்டணி: அப்படியானால், விசிகவை கூட்டணிக்குள் அதிமுக கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கான முயற்சியும் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த சமாச்சாரம் அப்படியே கிடப்பில் உள்ளது.. இடதுசாரிகள், சிறுபான்மை கட்சிகள், அதிக சீட்டுக்களை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணியை பரிசீலிக்கும் என்பதையும் எடப்பாடி பழனிசாமி நன்றாகவே உணர்ந்துள்ளார்.

எனவே, திமுக கூட்டணியிலுள்ள சில கட்சிகளை இழுக்க அதிமுக சில அதிரடிகளை கையில் எடுக்க போகிறாராம்.. குறிப்பாக, விசிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிமுகவுக்கு இன்னமும் இருக்கிறதாம்.. அப்படியும் தங்கள் கூட்டணி வலுவாக அமையாத பட்சத்தில், பாமகவையும் உள்ளே கொண்டுவரவும் திட்டமிட்டு வருகிறதாம்.

மெகா கூட்டணி: ஆக, விசிக, பாமக, தேமுதிக + பாஜக எதிர்ப்பு ஓட்டுக்கள் + திமுக அதிருப்தி ஓட்டுக்கள் + சிறுபான்மை ஓட்டுக்கள் போன்றவைகளை வைத்தே, மெகா கூட்டணியை அதிமுக கட்டமைக்க போவதாக சொல்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டதால், அதிமுகவின் தொண்டர்களும் சற்று தெம்பாகி விட்டதால், வரும் தேர்தலில் இறங்கி அடிக்க எடப்பாடி தயாராகி வருகிறாராம்..

அதுமட்டுமல்ல, இனிவரும் நாட்களில், மேலிட பாஜகவின் "நெருக்கடிகள்" அதிகமானாலும்கூட, அதனை வைத்தே அனுதாப ஓட்டுக்களை பெறவும் கணக்கு போடப்பட்டு வருகிறதாம். ஆக, எந்த பக்கமிருந்து அம்புகள் வந்தாலும், அதை திருப்பி வாங்கி எதிர்தரப்பிடமே வீச, ரெடியாக கொண்டிருக்கிறாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...!

விநோதம்: ஒருவேளை, அதிமுக கூட்டணி பலவீனமாகிவிட்டால், திமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் பிளஸ் ஆகிவிடும் என்கிறார்கள்.. எனினும், பிரதமர் வேட்பாளர் முகமின்றி, தேர்தலை எதிர்கொள்ளும் விநோதத்துக்கு அதிமுக ஆளாகியிருப்பதால், அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+