Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த" கண்கள் பன்னீரை தேடியதாமே.. என்னாது, கவர்னராக போறாரா? தாமரையில் மூழ்குதா "தேனி".. 3 சாய்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டரீதியான போராட்டங்களையும் தாண்டி, ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்வார்? என்கிற எதிர்பார்ப்புகளும், யூகங்களும், கேள்விகளும் கிளம்பியுள்ளன.

பொதுச்செயலாளர் விவகாரம் கட்சிக்குள் தலைதூக்கியதில் இருந்தே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிகம் நம்பியது, நீதிமன்றத்தைதான்.. சட்ட விதிகளுக்கு புறம்பாக, எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட செயல்பாடுகள்தான், ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கையை தந்தது..
எடப்பாடி பழனிசாமியின் சட்டத்தின் ஓட்டைகள்தான், ஓபிஎஸ்ஸுக்கு சாதமான அம்சங்களாக பார்க்கப்பட்டன.

எனினும், பொதுச்செயலாளராக, "தற்சமயம்" எடப்பாடி பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது.. இதை தீர்ப்பு என்றும் சொல்ல முடியாது.. "இடைக்கால ஆணை" உத்தரவு என்றுதான் சொல்ல வேண்டும். தடை ஆணை உத்தரவை, "வெற்றி" என்று எடப்பாடி தரப்பு மகிழ்ந்து கொண்டாடி வருகிறது. மற்றொருபக்கம் ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

 தலைகீழா போகுதே

தலைகீழா போகுதே

சமீபகாலமாகவே, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வரும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டு, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனே அதிர்ந்து போய்விட்டாராம்.. "எல்லாம் தலைகீழாக போகுதே" என்று ஓபிஎஸ் டீம் நொந்து கொண்டதாம்.. நேற்றைய தினமும் அவ்வாறே நடந்துள்ளது.. இன்னமும் சட்டரீதியான போராட்டத்தை ஓபிஎஸ் கைவிடவில்லை.. ஆனால், எல்லாவிதமான தோல்வியும் அடைந்துவிட்டால், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்வார்? என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் சந்தேகமாக உள்ளது.. இதற்கு 3 ஆப்ஷன்களும் சொல்லப்படுகின்றன..

 தனிக்கட்சி

தனிக்கட்சி

முதலாவதாக, பாஜக தலைவர் அண்ணாமலை திட்டப்படி, அதிமுக இல்லாமல் மூன்றாவது அணி அமைக்க, பாஜக மேலிடம் ஓபிஎஸ், தனிக்கட்சி துவங்கலாம் என்கிறார்கள்.. அப்படி துவங்கினால், சசிகலா + டிடிவி தினகரனின் ஆதரவுகள் பெருவாரியாக கிடைக்கும்.. இந்த அணி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. பாஜகவில் ஓபிஎஸ் தரப்புக்கு சீட்டுகளும் ஒதுக்கப்படலாம்.. அந்தவகையில், தேனி தொகுதி, ஓபிஆருக்குத்தான் என்பதில், பிரதமர் மோடி + அமித்ஷா இருவரும் ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தென்மண்டலங்களில் சீட் ஒதுக்கலாம் என்றெல்லாம் ஒருவித கணிப்பு சொல்லப்பட்டு வருகிறது.

 பதவியேற்பு

பதவியேற்பு

இரண்டாவதாக, பாஜகவிலேயே ஓபிஎஸ் இணைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜக விசுவாசியாக மாறிவிட்ட ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகளை அதிமுக தரப்பும் கவனிக்காமல் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு, குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு ஓபிஎஸ் அழைக்கப்பட்டிருந்தார். இந்த பதவியேற்பு விழாவின்போது, முதல் வரிசையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் உட்கார்ந்திருந்தனர். இவர்களுக்கு பின்வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு, அங்கே ஓபிஎஸ் உட்கார வைக்கப்பட்டிருந்தார். இதை கேள்விப்பட்ட மோடி, ஓபிஎஸ்ஸையும் முதல் வரிசையில் உட்கார வையுங்கள் என்று அதிகாரிகளிடம் சொன்னாராம்.

 காவி தலைவர்

காவி தலைவர்

அதுமட்டுமல்ல, முழு "காவி தலைவராக" ஓபிஎஸ் உருவெடுத்ததை அன்றைய தினம் காண முடிந்தது.. அதுபோலவே, அடுத்த சில நாட்களில், ஓபிஎஸ் தேனி நோக்கி செல்லும்போது, ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் முன்பு, பாஜக மாவட்ட செயலாளர் பாண்டி, ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார்.. அப்போது பாண்டி, திடீரென ஓபிஎஸ்சுக்கு காவி துண்டு அணிவித்தார்... உடனே, பாஜக சார்பில் பாரத் மாதா கி ஜே என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.. தேனியில் "பாரத் மாதா கி ஜே" ஒலித்ததையும் அதிமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. சமீபத்தில் இடைத்தேர்தல் விவகாரத்தில் தமிழக பாஜக தன்னை பாராமுகமாக நடத்திய விதம்குறித்து ஓபிஎஸ் மிகுந்த அதிருப்தியில் இருந்தாராம்.. தன்னுடைய இந்த வருத்தத்தை மேலிடத்துக்கும் தெரியப்படுத்தினாராம்.

 அசைக்க முடியலயே

அசைக்க முடியலயே

அப்போதுகூட, மேலிட பாஜக, ஓபிஎஸ்ஸை அழைத்து, நிறைய தெம்பையும், உற்சாகத்தையும் தந்ததாக சொன்னார்கள்.. எல்லாவற்றுக்கும் மேலாக, ஓபிஆர் மீதான நம்பிக்கை பாஜக தலைவர்களுக்கு அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது. ஆக, எப்படி பார்த்தாலும், பாஜக மேலிடத்தின் ஆதரவை அபரிமிதமாகவே ஓபிஎஸ் பெற்றுள்ள நிலையில், பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. அப்படி, ஓபிஎஸ்ஸை, கட்சிக்குள் இணைத்துக்கொள்ளும்பட்சத்தில், தென்மண்டலங்களில் தாமரையின் வளர்ச்சி எழுச்சி பெறும் என்றும் பாஜக நம்புவதாக தெரிகிறது.

 ஆயிரம் அர்த்தம்

ஆயிரம் அர்த்தம்

மூன்றாவதாக, 2017 போலவே, பாஜக மேலிடம் சமரசம் செய்ய முயன்றால், ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் அல்லது கவர்னராக பொறுப்பு தர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. ஆனால், பாஜக ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே உள்ளதால், அதற்கான வாய்ப்பு குறைவு என்றும் சொல்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், நேரடியாக அல்லது மறைமுகமாக பாஜக ஓபிஎஸ்ஸுக்கு உதவலாம்.. குறிப்பாக, தேர்தல் ஆணையம் மூலம் மறைமுக உதவி செய்ய வாய்ப்புள்ளதாம்.. ஆனால், என்னதான், பாஜகவின் உதவிகள் கிடைத்தாலும், அரசியல் ரீதியாக மட்டுமே களவாடி தன்னை ஓபிஎஸ் நிலைநிறுத்தி கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. மொத்தத்தில், "மக்கள் மன்றத்தை நாடபோகிறோம்" என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அடிக்கடி சொல்லிவருவதில், ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என்பதை ஓபிஎஸ் இனி உணர்ந்திருப்பார் என்றே நம்பலாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+