"முக்கோண முடிச்சு".. அங்கே எடப்பாடி.. இங்கே சீமான்.. குறுக்கே "வாரிசு".. ஆஹா, கிளப்பி விட்டுட்டாங்களே
சீமான், எடப்பாடி பழனிசாமி இருவர் மீதும் ஒரே சமயத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகி வருகிறது
சென்னை: ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமான் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அதிமுக, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த வழக்கு பதிவுகளை கண்டித்து, அந்தந்த தொண்டர்கள் போராட்டத்தை நடத்தி, எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
2 நாட்களுக்கு முன்பு, மதுரை ஏர்போர்ட்டுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார்.. அப்போது ஓடுதள பஸ்ஸில் பயணித்தபோது, திடீரென ஒரு இளைஞர் எடப்பாடிக்கு எதிராக ஒருவர் முழக்கமிட்டிருந்தார்..
அந்த லைவ் வீடியோவில், "இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்... அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர்" என்றார்..

பஸ்ஸூக்குள்ளே
இந்த நபர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே, எடப்பாடி பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸார் இதை கவனித்துவிட்டு, செல்போனை பறித்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரியவந்ததையடுத்து, அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.. இதையடுத்து ராஜேஸ்வரன் தாக்கப்பட்டார்.. இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூட்டை முடிச்சுக்கள்
அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார்.. இந்த விஷயத்தில் திடீரென என்ட்ரி தந்தார் பிரசாந்த் கிஷோர்.. சீமான் பேசிய அந்த வீடியோவை, ட்விட்டரில் வெளியிட்டு, "வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தங்களின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா?" என்று காட்டமாக கேட்டிருந்தார்... இதையடுத்து சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒத்த செங்கல்
இப்போது விஷயம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமி + சீமான் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட காரணமே உதயநிதிதான் என்று சிலர் குற்றஞ்சாட்ட துவங்கிஇருக்கிறார்களாம்.. இந்த விஷயத்தில் திடீரென உதயநிதியை ஏன் கோர்த்துவிடுகிறார்கள்? என்ன காரணம்? பின்னணி என்ன? என்பது குறித்த விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வட்டமிட்டு வருகின்றன.. உண்மையை சொல்லப்போனால், எய்ம்ஸ் விவகாரத்தில் ஒற்றை செங்கல்லை அன்று கையில் எடுக்கும்போதே, டெல்லி தரப்பு எரிச்சல் அடைந்ததாம்.. அந்தவகையில், தேசிய அளவில் உதயநிதி கவனம் பெற்றுவிட்டதாக திமுக மேலிடம் அப்போதே கருதியது..

எழுச்சி + மலர்ச்சி
அதற்கேற்றபடி, கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில், உதயநிதியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் பேசப்பட்டன. அவருக்கான முக்கியத்துவமும் கட்சிக்குள் அதிகரித்தன.. உதயநிதியின் ஆய்வுகள், பேட்டிகள், ட்வீட்கள் அனைத்தும் பிற கட்சி தலைவர்களின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கின.. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் திமுக இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்த துவங்கியது.. அதனால்தான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தபோதுகூட, உதயநிதியின் பெயரை சொல்லி விமர்சித்து பேசியிருந்தது அதிகமாக கவனிக்கப்பட்டது.

வணக்கம் வணக்கம்
இத்தகைய விமர்சனம் அதிமுக தரப்பிலும் அதிகமாகவே கிளம்பியது.. ஒருமுறை மூத்த தலைவர் கேபி முனுசாமி தன்னுடைய பிரச்சாரத்தில் பேசியபோது, "அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் முதல்வரை சந்திக்கிறார்களோ இல்லையோ, உதயநிதியை சந்தித்து வணக்கம் சொல்கிறார்கள்... ஸ்டாலின் முதல்வரா இல்லை உதயநிதி முதல்வரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று கேள்வியிருந்தார்.. இந்த 2 வருட காலமாகவே, எடப்பாடி பழனிசாமியும் உதயநிதியை டார்கெட் செய்தே பேசிவருகிறார்.

மாறுபட்ட கோணங்கள்
உதயநிதியை நேரடியாகவே டார்கெட் செய்வதால், தனக்கான முக்கியத்துவமும் களத்தில் அதிகரிக்கும் என்பதுடன், ஸ்டாலின் Vs எடப்பாடி என்பதற்கு பதிலாக உதயநிதி Vs எடப்பாடி என்ற ரீதியில் களம் மாறுபடும் என்று அதிமுக மேலிடம் நம்புகிறதாம். அதனால்தான், நீட் விவகாரத்தில் உதயநிதி சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது முதல் வாரிசு அரசியல்வரை எடப்பாடியின் பிரச்சாரம் வேறு வகையில் பயணிக்க ஆரம்பித்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

எக்ஸ் புள்ளி
திமுக அரசு மீது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே எடப்பாடி பழனிசாமி புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தாலும், இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட, உதயநிதியை அதிகம் டார்கெட் செய்து பேசியதுடன், நீர்தேர்வு விவகாரம் குறித்தும் மறக்காமல் கேள்வி எடப்பாடி பழனிசாமி எழுப்பியிருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், ஒரு முன்னாள் முதல்வரே, அதுவும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரே உதயநிதியை விமர்சிக்கிறார் என்றால், அது உதயநிதிக்கான வளர்ச்சிதான் என்று பாசிட்டிவ்வாக இதை அணுகிவருகிறார்களாம் திமுக தரப்பில்..!!

ஹாட் களம்
அதேபோல, நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை உதயநிதியை பற்றி, பெரிய அளவில் விமர்சித்தது இல்லை.. ஆனால், உதயநிதி அமைச்சரானதுமே, சீமான் காட்டமாக விமர்சிக்க ஆரம்பித்ததுடன், வழக்கம்போல் கிண்டல் கேலி செய்து பேசிவருகிறார்.. இவைகளை எல்லாம் மனதில் வைத்தே, எடப்பாடி மீதும், சீமான் மீதும் கோபத்தை காட்டி உள்ளார் உதயநிதி என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, பிரசாந்த் கிஷோர் ஒரே ஒரு ட்வீட் போட்டதாலேயே சீமான் மீது வழக்குபதிவு செய்வதா என்றும் நாம் தமிழர் தரப்பில் சீறுகிறார்கள்..

முக்கோண இடி
சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த விபரத்தை, பிரசாந்த் கிஷோருக்கும், உதயநிதிக்கும் அனுப்பி வைத்ததாகவும், பிரசாந்த் கிஷோர் உத்தரவில், உதயநிதி வழிகாட்டுதலில், சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சிலர் கிளப்பிவிட அதுதான் தற்போதைய ஹாட் விவாதமாக வெடித்து கொண்டிருக்கிறதாம்.. திமுக அரசை கண்டித்து அதிமுக தரப்பினர் போராட்டங்களை நடத்தி கொண்டிருக்க, சம்பந்தமே இல்லாமல், உதயநிதியை ஏன் இந்த விஷயத்தில் இழுக்க பார்க்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள் உடன்பிறப்புகள்..!!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications