எப்படி ஓட்டு போடாமல் இருக்க முடியும்? கைமாறிய ஸ்வீட் பாக்ஸ்! நாம் தமிழருக்கு போகும் விஜய் வாக்குகள்?
சென்னை: ஈரோடு கிழக்கில் திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. பிரதான கட்சிகள் அனைத்தும் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்ட நிலையில், அதிமுக-பாஜக-தேமுதிக கட்சிகளின் வாக்குகள் மற்றும் விஜய்யின் த.வெ.க. கட்சியினரின் வாக்குகளும் தனது கட்சிக்கு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் சீமான்.
பிரதான எதிர்க்கட்சிகளும், திமுகவுக்கு பாடம் புகட்ட சீமானை ஆதரிப்போம் என்கிற மனநிலையில் இருந்தன. இப்படிப்பட்ட சூழலில், அதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகளின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், இடைத்தேர்தலில் நாம் வாக்களிப்பதில் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்று கட்சிகளின் தலைமையிடம் கேட்டு வருகின்றனர். நம் வாக்குகள் யாருக்கு என்பதை விரைவில் அறிவுறுத்தப்படும் என்று தங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தன அக்கட்சிகளின் தலைமைகள்.

சீமானுக்கு செல்லும் விஜய் வாக்குகள்:
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளும், அரசு மீதுள்ள அதிருப்தி வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு என்கிற ரீதியில், கட்சியின் தலைமைக்கு சொல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில இன்ஸ்ட்ரக்ஷன்கள், இடைத்தேர்தல் பொறுப்பாளருக்கு சென்னையில் இருந்து தரப்பட்டுள்ளன. அதாவது, தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 90 சதவீதம் திமுகவுக்கானதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு தேர்தல் களத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட திமுகவினர், வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அப்படி வாக்குகள் சேகரிக்கும் போது, புதிய டெக்னிக் ஒன்றை பயன்படுத்துகின்றனர் உடன்பிறப்புகள்.
அதாவது, திமுக வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பதைக் கடந்து எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களை குறி வைத்துத்தான் அதிகம் செலவிடுகின்றனர். அப்போது, ''உங்கள் கட்சி தேர்தலை புறக்கணித்து விட்டது. அதனால் நீங்கள், வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வரவேண்டாம். ஓட்டுப்போட வராமல் இருக்க, இதோ பிடியுங்கள் என கனமான ஸ்வீட் பாக்ஸ்களை திணித்து வருகிறார்கள் ( ஒரு ஸ்வீட் பாக்ஸ் என்பது 1000 ரூபாய் ரொக்கம். ஒரு வீட்டில் 4 ஓட்டுகள் இருந்தால் 4,000 ரூபாய் ). எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களின் காட்டில் மழை கொட்டுகிறது.
மிக சீக்ரெட்டாக நடந்து வருகிறது இந்த யுக்தி. எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதுதான் நடக்கும். முதல் முறையாக ஓட்டு போட வரவேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சீக்ரெட் மூவ் நடக்கும் போது, சில பகுதிகளில், ''அதெப்படிங்க ஓட்டு போடாமல் இருக்க முடியும் ? ஜனநாயக கடமையை செய்யனோம்ல'' என்று எதிர் விவாதம் செய்பவர்களிடம், அப்படியானால் ஓட்டுப் போடுங்க ; அதை திமுகவுக்குப் போடுங்க. போட விருப்பமில்லைன்னா... வேறு எந்த வேட்பாளருக்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் போட்டுவிடக்கூடாது. அதற்குத்தான் இந்த ஸ்வீட் பாக்ஸ் என்று வலியுறுத்தி வருகின்றனர் உடன்பிறப்புகள். தொகுதிக்குள் இந்த சம்பவம் ஆச்சரிய அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது
நோ பிரச்சாரம்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தைரியமாக எதிர்த்து நிற்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பொங்கல் அன்றுதான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். சீதாலட்சுமி, ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 1 கோடி.
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி, நமக்கு போட்டியா? என்று கெளரவக் குறைச்சலாக திமுக தலைமை கருதுகிறதாம். இதனால் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் போகத் தேவையில்லை என்று மூத்த அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்களாம். அனேகமாக பிரச்சாரத்துக்கு இவர்கள் இருவரும் செல்ல மாட்டார்கள் என்றே அறிவாலயத் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications