கமலாலய வாசலில் "தலைகள்".. இதான் அண்ணாமலை ஆரம்பம்.. "தேடிவந்து ஆதரவு தந்த காலம் போச்சே": பூங்குன்றன்
கமலாலயத்தில் அதிமுக ஆதரவு கேட்டு சென்றதை பூங்குன்றன் விமர்சித்துள்ளார்
சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில் பாஜக தன் நிலைப்பாட்டை, விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், பாஜகவிடம் அதிமுக தரப்பு ஆதரவு கேட்ட விவகாரம் இன்னும் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. அது தொடர்பான விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
எனினும், அவ்வப்போது அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். பூங்குன்றனின் பதிவுகள் என்றாலே, மிகுந்த எதிர்பார்ப்பையும் சில சமயம் ஏற்படுத்திவிடும்.

அண்ணாந்து மலை
காரணம், கடந்த சில மாதங்களாகவே, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பூங்குன்றன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, "அண்ணாமலை, அண்ணாந்து பார்க்கின்ற மலை, அதைப் போலவே இன்று இந்த அண்ணாமலையும் உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் வளர்ந்தும், தான் சார்ந்த கட்சியை வளர்த்தும் வருகிறார். அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடம் புதிய எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

பூங்குன்றனா இது
கடந்த வாரம்கூட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.. அதில், "வளர்ந்து கொண்டிருப்பவரை எல்லோரும் சேர்ந்து வீழ்த்த நினைக்கிறார்கள் என்றால் நாம் அடுத்த அடியைப் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அண்ணாமலை அவர்கள் இனி அடுத்த அடிகளை எடுத்து வைக்க வேண்டும் என்பதை காலம் அவருக்கு போதிக்கிறது. அடுத்த அடி எது என்பது தன்னை தவிர யாருக்கும் புரியக்கூடாது என்பதே இன்றைய தேவை. பேச்சைக் குறைத்து செயலில் வேகத்தை கூட்ட வேண்டும் என்பது அண்ணாமலை அவர்களுக்கு நான் தரும் ஆலோசனை" என்று பூங்குன்றன் அட்வைஸ் ஒன்றையும் அண்ணாமலைக்கு தந்திருந்தார்.

தகிக்கும் களம்
இந்நிலையில், வரப்போகும் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடுவதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதா? என்ற குழப்பத்தில் உள்ளது. அநேகமாக இன்று அல்லது நாளைக்குள் தன் முடிவை பாஜக வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.. ஆனால், அதிமுக களத்தில் குதித்துள்ளது.. கூட்டணிக்கு சீட்டை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாகவே போட்டியிட போகிறது அதிமுக.. அதாவது, எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இரு தரப்புமே போட்டியிட போகிறார்கள்.. அதனால், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை, முன்னாள் முதல்வர் எடப்பாடி தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

கமலாலயம் பிஸி
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள், கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டார்கள்.. ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியின் கமலாலயம் சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்... இப்படி 2 தரப்புமே அடுத்தடுத்து ஆதரவு கோரியுள்ள நிலையில் பாஜவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? யாருக்கு ஆதரவை தரப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிற கொண்டிருக்கிறது.. இது ஒருபக்கம் இருந்தாலும், இவர்கள் 2 பேருமே, கமலாலயம் சென்று ஆதரவு கேட்டது பேசும்பொருளாகி வருகிறது.. இதுதொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேலு - மதுவந்தி
அந்தவகையில், அண்ணாமலையை ஓபிஎஸ் சந்தித்து பேசிய போட்டோவை வெளியிட்டு, "முதல் முறையாக அதிமுக தலைவர்கள் பாஜக அலுவலகம் வந்து வரும் இடைத்தேர்தலில் ஒருமித்த வேட்பாளர் நிறுத்துவது குறித்து ஆலோசித்து உள்ளனர்" என ட்வீட் செய்திருந்தார். உடனே இந்த ட்வீட்டுக்கு பாஜக ஆதரவாளரான மதுவந்தி, "இனிமே இப்படித்தான் வேலு'' என்ற டயலாக் தான் என் நினைவுக்கு வருகிறது. அதிமுகவினர் கமலாலயத்துக்கு வந்ததில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டரில் சிலர் முன்னும் பின்னுமாக செல்வதை கண்டு வியப்படைகிறேன்.. இதுதான் அண்ணாமலையில் ஆரம்பம்'' என்று கூறியிருந்தார்..

பூங்குன்றன் குஷி
இப்போது அதுபோலவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் இதுகுறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், "தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய், ஆதரவைத் தேடி ஓடுகிற காலம் வந்துவிட்டதே" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவும் வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது.. ஏற்கனவே அண்ணாமலைக்கு ஆதரவையும், அட்வைஸையும் தந்து வரும் நிலையில், பூங்குன்றனின் இந்த ட்வீட், தமிழக பாஜகவுக்கு மேலும் தெம்பை வருகிறது..!!!

கன்பார்ம்டு
இதனிடையே, அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தங்களது பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த உடனேயே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்திருந்த நிலையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என்று ஓபிஎஸ்ஸும் கூறியிருந்தார். ஆனால், பாஜக தனித்து களமிறங்கினால், எடப்பாடி பழனிசாமி ஆதரவு தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எகிறி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications