புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறக்கக்கூடாது.. கொண்டாட்டங்களுக்கு தடை விதிங்க: அர்ஜுன் சம்பத்
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு நடத்தக்கூடாது என்றும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்து, 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையை மக்கள் கொண்டாடுவார்கள். ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, இந்து கோவில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும்.

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதை ஒட்டி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆகம விதிகளை மீறி கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு நடத்தக்கூடாது என்றும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், "வரும் ஜனவரிம் 1 ஆம் தேதி ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு செய்யக் கூடாது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது விருந்துடன் கொண்டாடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அர்ஜுன் சம்பத், "சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குறித்து அதன் எப்.ஐ.ஆர் வெளியிட்ட காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வெளியிட்டதால் அந்த பெண்ணின் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் கிறிஸ்தவர் என சொல்லிக்கொள்ளட்டும். சங்கிகள் வயிறு எரிவார்கள் என சொல்கிறார். ஆனால், துர்கா ஸ்டாலின் தான் வயிறு எரிவார். என்னையும், பாஜக தலைவர் அண்ணாமலையையும் திமுக ஐடி விங் தரக்குறைவாக இணையதளங்களில் விமர்சித்து வருகிறது.
ஆனால், கருத்து சுதந்திரம் கூட இல்லாமல், சமூக வலைத்தளங்களில் யாராவது வீடியோ வெளியிட்டால் உடனடியாக கைது செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி. திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் ஆடு வெட்டுவோம் என்பதை ஏற்றுக்கொள்ள் முடியாது. அதனை முழுமையாக தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்ய கூடாது என அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு அறிவித்த விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு தமிழகத்தில் செயல்படுத்தாமல் இருக்கிறது. ஆனால், அந்த பெயரை கலைஞர் கைவினைஞர்கள் திட்டம் என பெயர் மாற்றம் செய்து செயல்படுத்துகிறார்க்ள். அந்த திட்டத்தின் பெயரில் விஸ்வகர்மா என இடம்பெற வேண்டும்.
ஜனவரி 5 ஆம் தேதி மதுரையில் பிராமணர் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற சொல்லி உண்ணா விரதம் நடத்த இருக்கிறோம். ஜனநாயக முறைப்படி, இந்துக்கள் போராட்டம் நடத்தினால், அரசு அனுமதி வழங்குவது கிடையாது. ஆனால், மற்றவர்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். பிராமணர்களை இழிவுபடுத்துவோரையும் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications