ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி பின்னப்பட்ட வலை? பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங் இப்படிப்பட்டவரா? ஒரே முழக்கம் இதுதானாமே
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தீவிர விசாரணை நடந்து வரும்நிலையில், ஆம்ஸ்ட்ராங் பற்றின பல்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு, ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராகவே வலம் வந்துள்ளார்..

ஆம்ஸ்ட்ராங்: இதனால், 24 மணி நேரமும் ஆதரவாளர்கள் நிழல் போல் உடனிருந்து வருவார்களாம்.. இவர்கள் இல்லாமல் எங்கேயுமே வெளியே போக மாட்டாராம்.. ஆம்ஸ்ட்ராங் யாரை சந்திக்க விரும்புகிறாரோ அவரை மட்டும்தான் சந்தித்து பேசுவாராம்.. அந்த அளவில், தன்னை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாதவாறு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார்.
அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர் மற்றும் தொழில் போட்டியாளர்களிடம் இருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்ததாக தெரிகிறது. அதனால்தான், வெளியே வருவதை குறைத்து கொண்டுள்ளார்.. தவிர்க்க முடியாத மிக முக்கியமான நிகழ்ச்சிகள் என்றால் மட்டுமே, ஆதரவாளர்கள் புடைசூழ பாதுகாப்பாக சென்றுவிட்டு வருவாராம்.
தலித் தலைவர்: நேற்றைய தினம், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் என்று நிஜமாகவே நினைத்து அசால்டாக நின்று பேசிக் கொண்டிருந்தாராம். ஜொமேட்டோ ஊழியர்களை போல அந்த கும்பல் வந்துள்ளது. தன்னுடைய வீட்டு பக்கத்தில் இருப்பதால், 2 ஆதரவாளர்கள் மட்டுமே உடனிருந்திருக்கிறார்கள்..
ஒருவேளை வெளியிடத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால், நிச்சயம் அவரை ஆதரவாளர்கள் ஆபத்தின்றி காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார்கள்.. அதேசமயம், இது நீண்ட நாள் திட்டமிட்ட பழிவாங்கல் என்கிறார்கள். இதற்காகவே பலநாட்கள் காத்திருந்து கொலையை செய்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அப்படியிருந்தும்கூட, தமிழ்நாட்டில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்திருக்கிறார்.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு என்று குறிப்பிட்ட செல்வாக்கை தனிநபராகவே உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங்.
பௌத்தம்: திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.. தலித் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரிடமும் நல்ல இணக்கமான நட்பைக கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டில் தலித் அரசியலை தீவிரமாகப் பேசி வந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.. அதிலும், அம்பேத்கரிய வழியில் பௌத்த மதத்தை தழுவி பௌத்த நிகழ்வுகளையே முன்னெடுத்து வந்திருக்கிறார்.. தலித் அரசியல் இயக்கங்கள் நடத்திய பௌத்த நிகழ்வுகளில் ஆம்ஸ்ட்ராங் தவறாமல் கலந்து கொண்டுள்ளார்..
பல ஏழை எளிய தலித் மாணவர்களின் மேற்படிப்புக்கு ஆம்ஸ்ட்ராங் பொருளுதவி செய்திருக்கிறாராம்.. இவரால் கல்வி கற்று இன்று நல்ல நிலைமையில் உள்ள இளைஞர்கள் ஏராளம் உண்டு.. பொருளாதார உதவி தவிர இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்.
முழக்கம்: "பட்டியலின மக்களின் சமூக விடுதலை, கல்வியின் அவசியம், அவர்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள உரிமை" என்பதே ஆம்ஸ்ட்ராங்கின் லட்சியமாக இருந்து வந்துள்ளது.. இந்த வரிகளைத்தான், ஒவ்வொரு மேடைகளிலும் முழங்குவாராம் ஆம்ஸ்ட்ராங்...
யாருக்கு என்ன பாதிப்பு என்றாலும் அங்கே சென்று உதவிக்கரம் நீட்டுபவர்.. பொதுப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தவறாதவர். இதற்காகவே 45 வருடம் வரை திருமணமே செய்யாமலும் இருந்திருக்கிறார்.. சமீபத்தில்தான் திருமணம் செய்து, இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இது பழிவாங்கலா? தொழில் போட்டியா? என்று தெரியவில்லை.. ஆனால், 17 வருடம் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர்.. நிறைய படித்தவர், அதுவும் வழக்கறிஞர், சமூக அக்கறை நிறைந்த ஒரு கட்சி தலைவருக்கே இந்த கதியா? என்று அதிர்ந்து போயிருக்கிறது தமிழ்நாடு...!!
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியை வைத்து சென்னை அமைந்தகரையில் மாபெரும் பேரணி மற்றுமற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.. அதன் பிறகுதான் அவர் புகழ்பெற்றார்... அப்போது முதல்தான் அவருக்கு எதிரிகளும் அதிகமானார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications