ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரன் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல் நல குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நாகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற அனுமதிக்க கோரியும், தற்போதைய உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கையை வழங்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவரை உடனடியாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாகேந்திரன் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications