சென்னை அரும்பாக்கம் 31.7 கிலோ வங்கி நகை கொள்ளையர்கள் - போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் செயல்பட்டு வந்த ஒரு தனியாா் வங்கியின் கிளையில், கடந்த 13-ஆம் தேதி, பட்டப்பகலில் நுழைந்த ஒரு கும்பல், வங்கியில் வாடிக்கையாளர்கள் போல நுழைந்து, அங்கிருந்த காவலருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் குறித்து வங்கி கிளை மேலாளர் சுரேஷ் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கொள்ளை தொடர்பாக அரும்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து, ஒரே வாரத்தில் கொள்ளை கும்பலை கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பத்திரமாக மீட்டனர்.
கொள்ளை திட்டத்துக்கு முளையாக செயல்பட்ட வங்கியின் முன்னாள் ஊழியர் கொரட்டூரைச் சேர்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்குத் தலைவராக செயல்பட்டிருப்பது தனிப்படையினா் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. மேலும், வங்கியில் நடந்த நகைகள் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளா் அமல்ராஜூக்கும் தொடர்பு இருந்து விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளா் அமல்ராஜ், வில்லிவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்த சந்தோஷ், அதே பகுதி மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி உள்பட 7 பேரை தனிப்படையினா் அடுத்தடுத்து கைது செய்தனா். இதனைத் தொடர்ந்து, முருகனுக்கு உதவி செய்ததாக வில்லிவாக்கத்தைச் சோ்ந்த கேபிரியல் என்பவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு அளித்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் உள்ளிட்ட 3 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications