ஜெயலலிதா மரண வழக்கு.. எடப்பாடியிடம் விசாரிக்காமலேயே.. விசாரணை நிறைவடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி வா புகழேந்தி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை நிறைவடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த தொடங்கியது. இதில் ஓபிஎஸ்ஸிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அதில் ஆணையம் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தனக்கு தெரியாது என்ற பதிலையே கூறியிருந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்
அது போல் சசிகலாவின் அண்ணி இளவரசியிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தார்.

ஆணையத்திடம் புகழேந்தி மனு
இது தொடர்பாக ஆணையத்திடமும் புகழேந்தி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்திலும் சிகிச்சையிலும் தனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியாக உள்ளது.

மறு விசாரணை நடத்த வேண்டும்
எனவே இது தொடர்பாக, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று புகழேந்தி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க ஏப்ரல் 26ஆம் தேதி ஆஜராகுமாறு புகழேந்திக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

எடப்பாடியிடம் விசாரணை
மேலும் அன்றைய தினம் எடப்பாடியிடம் விசாரணை குறித்தும் ஆணையம் முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தது. அதன்படி புகழேந்தி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது. சென்னையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினார் புகழேந்தி. இதனால் இவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று ஏதேனும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.

விசாரணை முடிந்ததாக ஆணையம் தகவல்
ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் அனைத்து தரப்பினரிடமும் விசாரணையை நடத்தி முடித்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் விசாரணையை முடித்து விட்டதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இது வரை 152-க்கும் மேற்பட்டோரின் விசாரணை நடத்தியுள்ளது இந்த ஆணையம். இதன் பதவிக் காலம் அடுத்த மாதம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தற்போது அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆய்வறிக்கையை பெற்றவுடன் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை அடுத்த மாதத்திற்குள் தமிழக அரசிடம் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யும் என தெரிகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications