கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை மருத்துவர்னு அழைக்காதீர்கள்.. ஆறுமுகசாமி ஆணையம் குட்டு
சென்னை: கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணனை தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது என ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன் என்பது குறித்து அப்போதைய சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸிடம் ஆணையம் விளக்கம் கேட்டது.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனின் சாட்சியானது புறக்கணிக்கும் வகையிலான பொறுப்பற்ற பதில் மிகவும் வருத்தமளிப்பதுடன் எதுவும் முறையாக இல்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

திறன்மிகு சிகிச்சை
விடாப்படியாக சிறந்த மற்றும் திறன்மிகு சிகிச்சைக்காக மறைந்த முதல்வரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என்ற அப்போதைய சுகாதாரத் துறை செயலாளரின் பதில் வியப்பில் ஆழ்த்தியது.

தன்முனைப்பு
தன்முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இதுவல்ல என்பதையும் மறைந்த முதல்வரை விரைந்து குணமடைவதைப் பற்றி மட்டுமே அனைவரும் அக்கறை கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதையும் இங்கு குறிப்பிடலாம். சுகாதாரத் துறை செயலாளரின் கூற்று சரியென எடுத்துக் கொண்டாலும் மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவர்கள் லண்டனிலிருந்தும் பிசயோதெரபிஸ்ட் சிங்கப்பூரிலிருந்தும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்திய மருத்துவர்கள்
இந்த நிலையில் இந்திய மருத்துவர்களின் தன்முனைப்பிற்கு அழுத்தமளிப்பதாக இல்லையா, அப்போதய சுகாதாரத் துறை செயலாளர் மறைந்த முதல்வருக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிப்பதை தவிர்ப்பதற்காகத்தான் இந்திய மருத்துவர்கள் அவமதிப்பு என்ற கருத்தை முன் வைத்தார். (ஆனால் இது கற்பனையானது ,மிகவும் தவறானது) என்ற கருத்திற்கு ஆளானார்.

சுகாதாரத் துறை செயலாளர்
சுகாதாரத் துறை செயலாளரது கூற்றின் பொய்த் தன்மையை இது வெளிப்படுத்துவதுடன், இது போன்ற தகவல்கள் அப்போதே உடனுக்குடன் அரசிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தால் நோய்வாய்ப்பட்ட முதல்வரை மேற்கொண்டு உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய அரசுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதுடன், சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்து அமைச்சரவையிலும் அரசால் பரிசீலிக்கப்பட்டிருக்கும்.

சுவையான மற்றும் முரணாண செய்தி
இங்கு சற்று சுவையான மற்றும் முரணாண செய்தி என்னவெனில் கால்நடை மருத்துவரான சுகாதாரத் துறை செயலாளர் தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது என ஆணையம் தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ஜெ ராதாகிருஷ்ணன் பெங்களூரில் கால்நடை மருத்துவத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். கால்நடை அறிவியலில் முதுகலைப்பட்டமும் படித்துள்ளார்.












Click it and Unblock the Notifications