அதிகாரிகள் மாற்றம் ஓவர்.. இனி இதுதான் அடுத்த டார்கெட்! நாள் குறித்த ஸ்டாலின்! இது லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான முடிவு எடுப்பதில் முதல்வர் ஸ்டாலின் வித்தியாசமான முறையை கையாண்டு உள்ளாராம். நேற்று தலைமை செயலாளரும் மாற்றப்பட்டார். இதோடு தமிழ்நாட்டில் அதிகாரிகள் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இன்னும் மாற்றம் தேவை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல காவல்துறையில் பணியாற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் என பல்வேறு நிலைகளிலும் இடமாற்றம் நடந்தது. தேர்தல் ஆணையம் இந்த ட்ரான்ஸ்ஃபரை செய்திருந்தது. தேர்தல் முடிந்து நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது.
பொதுவாக, நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதும், தேர்தல் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், மீண்டும் பழைய இடங்களுக்கே மாறுதல் செய்யப்படும் அல்லது அவர்கள் விரும்பும் பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தமிழக டிஜிபியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த வகையில், தங்களுக்கு தோதான இடங்களுக்கு இடமாறுதல் கேட்டு டி.எஸ்.பி.க்கள்., இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் டிஜிபியிடம் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர். கடிதம் கொடுக்கப்பட்டு 1 மாதமாகியும் அவர்களுக்கு புதிய இடங்களில் போஸ்டிங் போடப்படவில்லை.
காரணம், போஸ்டிங்கிற்கு அப்ரூவல் தரவேண்டிய காவல்துறை போர்ட் கூடி முடிவெடுக்கவில்லையாம். அதாவது, இது போன்ற இடமாறுதல்களுக்கு ஒப்புதல் தருவதற்காக டி.ஜி.பி.,, அடிசனல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு ), அடிசனல் டி.ஜி.பி. ( நிர்வாகம்) ஆகிய மூன்று உயரதிகாரிகள் கொண்ட கமிட்டி இருக்கிறது. இந்த கமிட்டி கூடி ஆலோசித்து, காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அதற்கேற்ப இடமாறுதல்களை செய்வதற்கு அப்ரூவல் அளிப்பர். இந்த அப்ரூவல் இன்னும் கிடைக்கவில்லையாம். அதனாலே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்நிலைய அதிகாரிகளுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. இதனால், தொலை தூரத்தில் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற புலம்பல்கள் காவல்துறையில் அதிகம் கேட்கிறது.
மாற்றம்: சமீபத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று வந்த சுப்ரியா சாஹு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பல உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தலைவராக இருந்த மற்றொரு பிரபல மூத்த அதிகாரி ககன்தீப் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களில் இருந்து உயர்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் மாற்றம்: பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் பதவிகளை உருவாக்க அரசு அனுமதி அளித்துள்ளது. . எனவே, இதுவரை கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றைக் கவனித்து வந்த சந்திர மோகனுக்கு பதில் மங்கத் ராம் சர்மா இதை கவனிப்பார்.
சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கட்டளை பி.சந்திர மோகன் கவனிப்பார். பொதுப்பணித் துறையை கவனிப்பார்.
மணிவாசன் நீர்வளப் பொறுப்பாளராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளராக இருந்த பி செந்தில் குமார் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றியமைக்கப்பட்ட துறைகளின் பிற அதிகாரிகள்: ஆர்.செல்வராஜ் (தமிழ்நாடு சாலைத் துறை திட்டத்தில் இருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு), ஏ ஜான் லூயிஸ் (அரசு கேபிள் டிவி முதல் சமூக பாதுகாப்புத் திட்டம் வரை) மற்றும் எம்.விஜயலட்சுமி (வீடு மற்றும் நகர்ப்புறத்திலிருந்து) இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் வளர்ச்சி) ஆவர்.
இதோடு இல்லாமல்சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எல்லாமே ஓவர்: இதோடு நேற்று தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அடுத்து என்ன? : இதோடு தமிழ்நாட்டில் அதிகாரிகள் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக..தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.












Click it and Unblock the Notifications