தமிழ்நாட்டில் தொகுதிக்கு 10 ஆயிரம் வாக்குகள் கூடியிருக்கு.. கார்த்தி சிதம்பரம் சொன்ன பாய்ண்ட்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார். கடந்த தேர்தலை விடவும் 24 லட்சம் வாக்குகள் அதிகரிப்பு என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல என்று கூறிய கார்த்தி சிதம்பரம், கடந்த 3 தேர்தல்களாகவே வாக்களிப்போரின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கோடை வெயில் காரணமாக காலையில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பெண் வாக்காளர்களில் 85.76% பேரும், ஆண் வாக்காளர்களில் 83.57% பேரும் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 83.74% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும், வாக்குகளை ஒப்பிடும் போது சுமார் 24 லட்சம் வாக்குகள் வரை உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ள பதிவில், வாக்குகளின் சதவிகிதத்தை விட மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கடந்த 3 சட்டசபைத் தேர்தல்களிலும் ஒவ்வொரு தொகுதியாக பதிவான மொத்த வாக்குகளை ஒப்பிட்டு பாருங்கள். அப்படி ஒப்பிட்டு பார்த்தால், ஒவ்வொரு தொகுதியிலும் சீரான உயர்வு ஏற்பட்டிருப்பதை உங்களால் காண முடியும்.
அதேபோல் முந்தைய தேர்தல்களை போல் அல்லாமல், இம்முறை தேர்தல் தரவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் 24 லட்சம் வாக்குகள் உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வாக்குகள் உயர்ந்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் SIR காரணமாக வாக்கு சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும், வாக்குகள் அதிகரிக்கவில்லை என்ற விவாதமும் தீவிரமாகி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications