ஓபிஎஸ் தரப்பு புதிய கண்டுபிடிப்புடன் நீதிமன்றம் சென்றது..நீக்கம் செல்லும்..அதிமுக இன்பதுரை பரபர
சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கில் பொதுக்குழு செல்லும் என்று பிப்ரவரி 22 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கபட்டது. ஆனால், தீர்மானங்கள் செல்லாது என புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆவதற்கான தடை நீங்கியது.

இன்பதுரை பேட்டி
இதையடுத்து உடனடியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவித்தது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு, தீர்மானங்கள் செல்லும்
அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கில் பொதுக்குழு செல்லும் என்று பிப்ரவரி 22 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்க்கபட்டது. ஆனால், தீர்மானங்கள் செல்லாது என புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுக்குழு செல்லும், தீர்மானம் செல்லும் எடப்பாடி தேர்வானது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்துள்ளது.

ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்
நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை முடிவை நிறுத்திவைப்பதாக சொல்லியிருந்தோம். தீர்ப்பில் தடை நீங்கியுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். ஓபிஎஸ்சை நீக்கியதும் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. எனவே இந்த தீர்ப்பு மூலம் எடப்பாடி தலைமையில் அதிமுக வலுவோடு பொழிவோடும் எழுச்சியோடும் இயங்கும். இந்ததீர்ப்பு அதை சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய பதில் அளிப்போம்
பொதுக்குழு சட்டப்படியானது என்பதை நிதிமன்றங்கள் எடுத்துக்காட்டியுள்ளது. அதிமுக தலைமை எடப்பாடி தான் என்பது இந்த தீர்ப்பு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. ஓபிஸ் தரப்பு மேல் முறையீடு சென்றுள்ளது குறித்து எங்களுடைய மூத்த சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து உரிய பதிலை அளிப்போம்" என்றார். "ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு சென்றுள்ளது குறித்து எங்களுடைய மூத்த சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து உரிய பதிலை அளிப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications