Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு! ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அமைச்சர் மா.சு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

Recommended Video

    COVID-19 பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? மா சுப்பிரமணியன் பதில் *Health

    சென்னை மருத்துவக் கல்லூரியில் ரத்த தானம் வழங்கும் முகாம், மருத்துவ மாணவர்கள் பேரவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகரிகள் கலந்து கொண்டனர்.

     அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னை மருத்துவக் கல்லூரி 187 ஆண்டு கடந்த பழமையான கல்லூரி. இது ஆசியாவின் மிகப்பெரிய பழமையான 2வது கல்லூரி. முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி உட்பட தமிழுக்குப் பெருமை சேர்ந்தவர்கள் பலரும் பயின்ற கல்லூரியாக. இங்குப் படித்தவர்கள் உலக அளவிலும் புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கின்றனர். 9 ஆண்டுகளில் மருத்துவத் துறை அமைச்சர் இங்கு வருவது இது முதல் முறை எனச் சொல்கிறீர்கள். இதுவரை வராமல் இருந்தது வருத்தத்தைக் கொடுக்கிறது. இங்கு வந்து பார்த்த பிறகு அடிக்கடி வர வேண்டும் என்று தோன்றுகிறது

     முதல்வர் இருந்த சிறை

    முதல்வர் இருந்த சிறை

    ஆரம்பக் காலத்தில் நான் இங்கு அடிக்கடி வந்துள்ளேன். காரணம் அப்போது இது சிறைச்சாலையாக இருந்தது. 10க்கும் மேற்பட்ட முறை இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றுக்காகச் சிறையில் இருந்திருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆண்டு காலம் இந்த சிறையில் தான் இருந்தார். இதுவரை 63 முறை ரத்த தானம் செய்துள்ளேன். தற்போது எனக்கு 62 வயதாகிறது. 65 வயது வரை வரம்பு உள்ளதால் இன்னும் தொடர்ந்து ரத்தம் தானம் செய்வேன். இந்திய அளவில் இரத்த தானம் செய்வதில் ஆர்வம் அதிகமாகக் கொண்டவர்கள் பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் தமிழகம் முதலிடத்தில் வரும் என்று நம்புகிறேன்" என்றார்.

     கொரோனா டெஸ்டிங்

    கொரோனா டெஸ்டிங்

    அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,3 மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகத் தான் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தற்போது செய்து வருகிறோம்

     சென்னை

    சென்னை

    சென்னையில் 207 தெருக்களில் 3க்கும் மேற்பட்டவர்கள், 187 தெருக்களில் 5க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதிப்பு உள்ளது. சென்னையில் 51 பேர் அரசு மருத்துவமனையிலும், 85 பேர் தனியார் மருத்துவமனையிலும் என மொத்தம் 136 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மாஸ்க் அணிவதில் இருந்து எந்த விதிவிலக்கும் அறிவிக்கப்படவில்லை. தற்போது சென்னையில் பல இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நாளை மயிலாப்பூர் லஸ் கார்ணரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 50,000 பேருக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

     தைசாப்பேட்டை

    தைசாப்பேட்டை

    சென்னை சைதாப்பேட்டை மருத்துவமனை மருத்துவ கழிவுகள் அருகில் உள்ள கிணற்றில் கொட்டப்படுவதாக எழுந்த பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த கிணறு தற்போது பயன்பாட்டில் இல்லை என விளக்கம் அளித்தார். மேலும் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மருத்துள்ளதாகவும், இருந்தும் அந்த பகுதிக்குச் சென்று தாம் ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

     மருத்துவர்கள் பிரச்சினை

    மருத்துவர்கள் பிரச்சினை

    அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை குறித்த கேள்விக்கு, "அரசு மருத்துவர்களில் இரு பிரிவுகள் உள்ளது. அவர்களிடையே கருத்து முரண்பாடு இருக்கிறது. இது, அரசுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான பிரச்சினை இல்லை. மருத்துவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான பிரச்சினை. இதில், அவர்களை ஒன்றுபடுத்தும் முயற்சி அரசு ஈடுபட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் பணிமாறுதல் வெளிப்படைத்தன்மை இல்லாமலேயே இருந்து வந்தது. ஆனால் இப்போது முழு வெளிப்படைத் தன்மை உடன் தான் பணிமாறுதல்கள் வழங்கப்படுகிறது.

     கொரோனா கட்டுப்பாடுகள்

    கொரோனா கட்டுப்பாடுகள்

    தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்தாலும் கூட 40 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவ படுக்கை நிரம்பினாலோ ஆர் டிபிசி ஆர் பரிசோதனையில் 10 சதவீதத்திற்கு அதிகமாகத் தொற்று பாதிப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது, அந்த நிலையில் தற்போது தமிழகம் இல்லை" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+