சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செக்க செவேல்னு மின்னும் சென்னை.. சுற்றி சிவப்பு தக்காளிகள்! அசானி புயலால் மீண்டும் மழை இருக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் மழை இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Recommended Video

    அதிகாலை மழையால் சட்டென்று மாறிய Chennai வானிலை | Chennai Rain Update | Oneindia Tamil

    தென் கிழக்கு அந்தமான் பகுதியில் அசானி புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் இது மீண்டும கடலை நோக்கியே திரும்பியது.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    என்ன ஆச்சு நம்ம சென்னைக்கு? திடீர் திடீரென முடங்கும் செல்போன் சேவை! மழை நேரத்தில் அவதியடைந்த மக்கள்! என்ன ஆச்சு நம்ம சென்னைக்கு? திடீர் திடீரென முடங்கும் செல்போன் சேவை! மழை நேரத்தில் அவதியடைந்த மக்கள்!

    குளிர்ச்சியான சூழல்

    குளிர்ச்சியான சூழல்

    இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சென்னைக்கு வரும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது போல் மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இரு நாட்கள்

    இரு நாட்கள்

    அது போல் சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்கேற்ப சென்னையில் குளிர் நிலவுகிறது. ஏசி எல்லாம் ஆப் மோடில் இருக்கின்றன. சென்னையில் பல ஆண்டுகள் கழித்து மே மாதம் மழை பெய்துள்ளதால் மக்களுக்கு அதிர்ச்சி கலந்த மழையாகவே இது இருக்கிறது.

     இடியுடன் கூடிய மழை

    இடியுடன் கூடிய மழை

    இந்த மழை அடுத்த சில மணி நேரங்களுக்கு பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். தமிழக கடலோரம் மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். நெல்லூர், சென்னை, புதுவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி சிவப்பு தக்காளிகள் உள்ளன.

    மழை

    மழை

    இதனால் இந்த பகுதிகளில் மழை பெய்யும். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சூறாவளி காற்று வீசுகிறது. மரங்கள் வளைந்தாடும் அளவுக்கு காற்று வீசி வருகிறது. காலையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மாலையும் மழை பெய்யும் சூழல் இருப்பதால் போக்குவரத்தை கருத்தில் கொண்டு பலர் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப நேரிடும் சூழல் உள்ளதாக தெரிகிறது.

    English summary
    Thunderstorms or rains seen in North Interior and Coastal Tamilnadu because of Asani Cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X