இந்தியா - பாக் 2 அணிக்காகவும் கிரிக்கெட் ஆடிய ஒரே வீரர்.. யாருங்க இது? பிரம்மிக்க வைக்கும் பின்னணி
சென்னை: ஆசிய கோப்பை 2022 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றதை இந்திய அணி ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த நிலையில்தான்.. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிக்காகவும் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஒருவரை பற்றிய கதை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை 2022 தொடர் ஆட்டம் நேற்று முதல் நாள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவர் வரை திக் திக் என்று திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் பாண்டியாவின் கூல் பினிஷிங் காரணமாக இந்தியா வெற்றியை வசப்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்து 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

ஒரே வீரர்
இந்த நிலையில்தான் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்காக விளையாடிய ஒரு வீரரை பற்றிய கதை பிரபலம் ஆகி வருகிறது.. என்ன இந்தியா பாகிஸ்தான் அணிக்காக ஒரே வீரர் ஆடினாரா? என்னங்க சொல்றீங்க? இப்போ டீம்ல இருக்காரா என்று கேட்க வேண்டாம். அவர் மிகவும் பழைய வீரர். அதற்கு கொஞ்சம் கிரிக்கெட் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுவிட்டது.

கிரிக்கெட்
1932ல் இருந்தே இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடி வந்தது. அப்போதெல்லாம் பரோடா கிரிக்கெட் அணிதான் இந்திய அணியாக கருதப்பட்டது. சில நாடுகளுக்கு டூர் செய்து கூட இந்த அணி ஆடியது. இந்த அணியில் ஆடிய முக்கிய வீரர்தான் அமீர் இலாஹி. அப்போது இந்திய தேசிய அணி வீரராக இவர் கருதப்பட்டார். அதன்பின் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டாக பிரிந்தது.

வரலாறு
இஸ்லாமியரான இவர் பாகிஸ்தான் மீதான பற்று காரணமாக பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இந்தியாவில் இருக்க விருப்பமின்றி பாகிஸ்தானுக்கு குடும்பத்தோடு சென்றார். இதனால் அவர் இந்திய அணியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். பாகிஸ்தானில் புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டதும், அனுபவம் மிக்கவர் என்பதால் நேரடியாக அமீர் இலாஹிக்கு பாகிஸ்தான் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின்னணி
ஆனால் இந்திய அணிக்காகவும், பாகிஸ்தான் அணிக்காகவும் இவர் பெரிதாக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியது இல்லை. உதாரணமாக இவர் இந்திய அணியில் இருந்த வரை இந்தியா ஒரு டெஸ்டில் கூட வென்றது இல்லை. பாகிஸ்தான் அணியிலும் இவர் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. பவுலிங் செய்யும் இவர்.. மிக குறைவான வேகத்தில் பந்து வீசி வந்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக ஆடிய இவர் 1953 இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியில் இணைந்து இந்தியாவிற்கே எதிராக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு அணிகளுக்காக ஒரே நபர் குறைந்த ஆண்டுகள் இடைவெளியில் ஆடிய இந்த கதை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications