ஓடிடி வெப் சீரிஸ், திரைபடங்களுக்கு சென்சார் செய்ய கோரி வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் மற்றும் திரைபடங்களை தணிக்கை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக மத்திய அரசை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பொழுதுபோக்குப் பகுதியில் முக்கியப் பங்கு வகிக்கும் நெட்பிளிக்ஸ், அமேஷான் பிரைம், டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், சோனி லைஃவ், ஜியோ சினிமா போன்ற சந்தா அடிப்படையிலான ஓடிடி தளங்களில் ஒவ்வொரு வாரமும் ஏராளமான வெப் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகின்றன.

திரையரங்குகளில், திரையிடப்படும் படங்களை கண்காணிக்க மற்றும் கட்டுபடுத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்
மேலும், எந்த முறையான ஆய்வும், தணிக்கையும் இல்லாததால், சந்தா செலுத்தும் நபர்கள் இணைய குற்றங்கள் மற்றும் சந்தாதாரர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள், வங்கி விவரங்களை இழக்க நேரிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருவதால், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கடுமையான வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதாகவும், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களை தணிக்கை செய்யக் கோரி கடந்த ஜூலை 11ம் தேதி தகவல் தொழிட்நுட்ப செயலாளருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பவித்ரா ஆஜராகி, பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும் வசனங்களிலும் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாகவும், இது குழந்தைகளை கெடுக்கும் வகையில் உள்ளதால் தணிக்கை செய்வது அவசியம் என வலியுறுத்தினார்.
பின்னர் நீதிபதிகள், எந்த வெப் தொடரில் இதுபோன்ற காட்சிகள் உள்ளது என குறிப்பிட்டு கூறாமல், பொதுப்படையாக உள்ளதாகவும், ஏற்கனவே அளித்த மனு பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், ஏதேனும் குறைகள் இருந்தால், மத்திய அரசின் சம்மந்தப்பட்ட சட்ட அமைப்பிடம் புகார் செய்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications