வங்கி கணக்கு கேட்டு லிங்க் அனுப்பிய பஞ்சவர்ணம்! ஆன்லைனில் ₹3.40 கோடி முதலீடு.. லாப பேராசை தந்த பாடம்
சென்னை: வங்கி கணக்குகளை தருமாறும், அதில் வரும் பணத்தை எடுத்துக் கொடுத்தால் நல்ல கமிஷன் தொகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினால் யாரும் தங்களது வங்கி கணக்கு விவரங்களை மோசடி நபர்களுக்கு தர வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. என்ன நடந்தது?
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருகிறார் சத்யநாதன்.. இவருக்கு வயது 68 ஆகிறது.. இவர் ஆன்லைன் முதலீட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.. ஆனால் கடந்த சில மாதங்களாகவே மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளர்..

இதுகுறித்து சத்யநாதன் சொல்லும்போது, "பெங்களூரில் இருந்து ஒருவர் என்னிடம் வந்தார்.. தன்னை ஒரு Fyers Securities அதிகாரி (Fyers Securities என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு ஆன்லைன் ஷேர்ஸ் மற்றும் பங்குச் சந்தை வர்த்தக நிறுவனமாகும்) என்று அறிமுகப்படுத்தி கொண்டார்..
பணம், வர்த்தகம்
FYERS VIP என்ற வாட்ஸ்அப் குழு ஒன்று இயங்கி வருவதாகவும், அதில் வர்த்தகம் தொடர்பான தொழில் முறை விவாதங்கள் நடக்கும் என்பதால், என்னுடைய தொழில் முறைக்கு உபயோகமாக இருக்கும் என்றும் கூறினார்..
அதன்படியே நானும் சம்மதம் சொல்லவும், என்னை அந்த வாட்ஸ்அப் குழுவில் இணைத்துவிட்டார்.. உடனே அந்த வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தவர்கள் 'FYERSHNI' என்ற செயலியை பதிவிறக்கும்படி சொன்னார்கள்.. நானும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினேன்.
ஆன்லைன் முதலீடு பணம்
அப்போது அந்த செயலியில் வரும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்று அந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்கள் சொன்னார்கள்.. அதை நம்பிய நானும், அந்த செயலியில் முதலீடு செய்ய தொடங்கினேன்..
கடந்த ஜுலை 7ம் தேதி, ஆன்லைன் வர்த்தக முதலீட்டாளர்கள் கொடுத்த லிங்கில் சென்று, சுமார் 13 வங்கி கணக்குகளுக்கு ரூ.3 கோடியே 40 லட்சத்தை அனுப்பி வைத்தேன்.. ஆனால் எந்த லாப பணமும் எனக்கு கிடைக்கவில்லை..
இதனால் முதலீடு செய்த பணத்தையும், அதற்கான லாபத்தையும் கேட்டபோது, அந்த குரூப்பில் உள்ளவர்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை.. மாறாக, அந்த செயலியை அனைவரும் சேர்ந்து முடக்கிவிட்டனர்.. அப்போதுதான் நான் ஏமாந்துவிட்டதை உணர்ந்தேன்" என்று கதறி சொல்கிறார் சத்யநாதன்.
பஞ்சவர்ணம், எப்சி
இதையடுத்து, சத்யநாதன், தேசிய இணையவழி குற்றப் போர்ட்டல் மற்றும் சென்னை காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (51) என்பவர்தான், இந்த சம்பவத்திற்கு மூளையாக இருந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் (49), எப்சி (35), பஞ்சவர்ணம் (33) ஆகிய 3 பேரும் இந்த சம்பவத்தில் புரோக்கர்களாக செயல்பட்டு, பணம் எடுத்துக்கொடுத்தது தெரியவந்துள்ளது.. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள எப்சியும், பஞ்சவர்ணமும் இந்த மோசடியில் பெருமளவு உதவியதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மூவரையும் தூத்துக்குடியில் கைது செய்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.
கிரைம் போலீஸ் அட்வைஸ்
ஏற்கனவே போலீசார் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.. தற்போது இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அட்வைஸ் தந்துள்ளனர்.
அதில், "ஆன்லைனில் முதலீட்டில் கவனமின்றி செயல்படுவதால் பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால், அறிமுகம் இல்லாதவர்களின் செல்போன் லிங்குகளை திறக்க வேண்டாம், அதிக லாபம், உத்தரவாதம் எனக்கூறும் ஆன்லைன் வர்த்தக முதலீடுகள், போலியான வர்த்தக செயலிகள், முன்பின் தெரியாத வாட்ஸ்அப் குழுக்களை நம்பி ஏமாற வேண்டாம்
மேலும், இணையவழி மோசடிகள் மற்றும் குற்றங்களில் பாதிக்கப்பட்டால், உடனடியாக www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் இணையதளத்திலும், தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை அழைக்கவும், மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications