சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அது" எதுக்கு.. சித்ராவுக்கு நிறைய பாய்ஃபிரண்ட்ஸ்.. அடங்கவேயில்லை.. அதான்.. போலீஸை அதிர வைத்த கணவர்

துணை நடிகையை கொன்ற கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.. இந்த முறை வேறு ஒருவருடன் சென்னைக்கு புறப்பட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாக, கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம்.. இவரது மனைவி சித்ரா.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு கல்யாணமாகிவிட்டது.. இவர்கள், திருப்பூர், செல்லம் நகரில் வசித்தனர். அமிர்தலிங்கம் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளி.

 லைக் வீடியோ

லைக் வீடியோ

சித்ரா பனியன் நிறுவனத்தில் டெயிலராக பணியாற்றி வந்தார்... அப்போது, டிக்டாக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.. இதனால் இவருக்கு ஏகப்பட்ட லைக்குகள் விழுந்துள்ளது.. டிக்டாக்கில் சில நண்பர்கள் சித்ராவுக்கு பழக்கமாகி உள்ளனர்.. சினிமாவில் சென்று நடிக்கலாமே என்று அவர்கள் சித்ராவை உசுப்பேற்றிவிட்டனர்.. ஏற்கனவே, டிக்டாக் வீடியோ பதிவிடுவதற்கே அமிர்தலிங்கம் ஆவேசமாகி விட்டாராம்.. மனைவியை கண்டித்தும் அவர் பேச்சை சித்ரா கேட்கவில்லை.. இப்போது சினிமா ஆசையை கணவரிடம் சொல்லவும், கடுமையான ஆத்திரம் அடைந்துள்ளார்..

 மாடர்ன் டிரஸ்

மாடர்ன் டிரஸ்

சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்லி உள்ளார்.. அதையும் மீறி, டிக்டாக் நண்பர்களுடன் சென்னையில் சென்று தங்கி உள்ளார் சித்ரா.. சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளர்.. கடந்த வாரம் சித்ராவின் மூத்த மகள் திருமணத்துக்காக சொந்த ஊர் வந்தபோது, அமிர்தலிங்கத்துடன் தகராறு நடந்துள்ளது.. இந்த சண்டையில் சித்ராவை கொன்றுவிட்டார் அமிர்தலிங்கம்.. இதையடுத்து, போலீஸார் அமிர்தலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, போலீசாரிடம் அமிர்தலிங்கம் தந்த வாக்குமூலம் இதுதான்:

 டெய்லர்

டெய்லர்

எங்கள் சொந்த ஊர் நிலக்கோட்டை... கல்யாணம் முடிந்ததும் திருப்பூரிலேயே தங்கிவிட்டோம்.. நான் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தேன். என் மனைவி சித்ரா, ஒரு பனியன் நிறுவனத்தின் டெய்லராக வேலை செய்து வந்தாள். சித்ரா அடிக்கடி செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தாள்... நான் இதனை முதலில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் சித்ராவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தினமும் புது புது டிரஸ்களை வாங்கி வந்தாள்.. அவைகளை போட்டுக் கொண்டு, டிக்டாக் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தாள்..

 டிராக் மாறியது

டிராக் மாறியது

அதற்கு பிறகு, யார் யாரோ அவளுக்கு போன் செய்ய துவங்கினார்கள்.. பல்வேறு நபர்களிடமிருந்து அவளுக்கு அடிக்கடி போன் வந்து கொண்டேயிருந்தது.. இதனை நான் கண்டித்தேன் ஆனால் அவள் கேட்கவில்லை... கடந்த மாதம், சினிமா சான்ஸ் கிடைத்திருப்பதாகவும், நண்பர் ஒருவருடன் அங்கேயே தங்கியிருக்க போவதாகவும் சொன்னாள்.. அதற்கு நான் மறுப்பு சொன்னேன்.. அதையும் மீறி அவள் சென்னைக்கு சென்று, சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டாள்.. கடந்த வாரம் திருப்பூர் வந்தபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க சென்னை செல்வதாக சொன்னாள்..

ஷூட்டிங்

ஷூட்டிங்

நான் செல்லக்கூடாது என்றேன்.. ஆனால் அவள் அதைக் கேட்காமல், இன்னும் 2 நாளில் ஷூட்டிங் இருப்பதாகவும், இந்த முறை வேறு ஒரு நண்பருடன் சென்னை செல்லப்போவதாகவும், அந்த விஷயத்தை மட்டும் யாருக்காகவும் விட்டுத்தர முடியாது என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சொல்லி வாக்குவாதம் செய்தாள்.. சென்னைக்கு கிளம்பவும் தயாரானாள்.. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலமுறை கூறியும் கேட்காததால் ஆத்திரத்தில் இருந்த நான், அவள் கழுத்தில் கிடந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பிறகு இது குறித்து என் மகளுக்கு போனில் சொல்லிவிட்டு, திருப்பூரில் இருந்து மதுரைக்கு தப்பி செல்லலாம் என்று புதிய பஸ் ஸ்டேண்டுக்கு சென்றேன்.. ஆனால், அதற்குள் என்னை போலீசார் பிடித்து விட்டனர்" என்றார்.

English summary
Asst Actress Chitras murder case and her husband confessed to Tirupur police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X