ஏடிஎம் மெஷினை உடைக்க 10 நிமிஷம் தான்.. “கேங் ஆபரேஷன்”.. மேவாட் கொள்ளையர்களின் அதிரவைக்கும் ஸ்டைல்!
சென்னை: கேரளாவில் 3 ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த மேவாட் கும்பலை நாமக்கல் அருகே நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த மேவாட் கும்பலை பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்தால் அடுத்த பத்தே நிமிடத்தில் துடைத்து அள்ளிவிட்டு எஸ்கேப் ஆவது இவர்களின் ஸ்டைலாம்.
கேரளாவின் திருச்சூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட மேவாட் கொள்ளை கும்பலை, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வெப்படையில் போலீசார் சேஸிங் செய்து விரட்டிப் பிடித்தனர். அவர்களை பிடிக்கும்போது பாதுகாப்புக்காக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

இந்த மேவாட் கொள்ளை கும்பலின் பூர்வீகம் ஹரியானா மாநிலம். அங்குள்ள 3 மாவட்டங்களில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் பிரதான தொழிலே திருடுவது தான். இந்த கும்பலில் 100 பேர் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. பெரிய நெட்வொர்க் கொண்டது இந்த கும்பல். நாடு முழுவதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து திருடுவதே இந்த கொள்ளை கும்பலின் வேலை.
குறிப்பாக இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள். எந்த ஏடிஎம் மெஷின் எப்படி இருக்கும்? எதை உடைப்பது ஈஸி என்றெல்லாம் அக்கு வேறு ஆணி வேராக அறிந்து வைத்திருப்பவர்கள். இந்தக் கும்பலில் சிலர் படித்தவர்களாகவும் உள்ளனர். அவர்கள் தான் பாதுகாப்பு அம்சங்களை மீறி ஏடிஎம்களை கொள்ளை அடிக்க ஸ்கெட்ச் போடும் புள்ளிகள்.
பணம் அதிகம் இருக்கும் ஏடிஎம்களை நோட்டமிடும் இந்த கும்பல், அடுத்து ஒரே ஏரியாவில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து கொள்ளைகளை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகும். சரக்கு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு கும்பல், தனியாக ஒரு காரில் ஒரு கும்பல், விமானத்தில் ஒரு கும்பல் என ஒரு கொள்ளைக்கு மூன்று குழுக்களாக தனித்தனியாக சென்று ஒரு இடத்தில் சேருவது இவர்களது வழக்கம்.
கொள்ளை அரங்கேற்றிய பிறகு காரை சரக்கு லாரியில் ஏற்றிக் கொண்டு வேறு பகுதிக்கு கிளம்பிவிடுவார்கள். ஏடிஎம் மெஷின் கேஸ் வெல்டிங் செய்பவர்கள், ஓட்டுநர்கள் என ஒவ்வொரு குழுவிலும் எக்ஸ்பெர்ட்டுகள் இருப்பார்கள். இப்படி, இணைந்து குழுவாக ஏற்கனவே தேர்வு செய்த பகுதிக்கு சென்று கொள்ளையடிப்பதே இவர்களது பாணி.
ஒரு ஏ.டி.எம் மையத்தில் புகுந்தால், 10 நிமிடத்தில் வேலையை முடித்துவிட்டு, கொள்ளையடித்த மொத்தப் பணத்தோடு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு, போலீஸ் சுதாரிப்பதற்குள் அந்த ஏரியாவை விட்டு பல நூறு கி.மீட்டர் தொலைவுக்கு சென்று விடுவது மேவாட் கொள்ளையர்களின் ஸ்டைல்.
அப்படித்தான் இந்த கேரளா ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்திலும் விமானத்தில் வந்த 2 பேர், காரில் வந்த 3 பேர், கண்டெய்னரில் வந்த 2 பேர் என 7 பேர் சென்னையில் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு திருச்சூர் சென்று ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். காரை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் காரை கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு எஸ்கேப் ஆகும்போது, கேரளா போலீஸ் அலர்ட் செய்ததால் தமிழக போலீசார் உஷார் ஆகி, நாமக்கல் அருகே பிடிபட்டுள்ளனர்.
தற்போது, நாமக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள் இருப்பிடம், வங்கி விவரங்கள், முந்தைய வழக்கு தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கு செல்கிறது? யாருக்காவது கொடுக்கிறார்களா? அல்லது வேறு காரணத்துக்கு செலவிடப்படுகிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் ஒரு ஏ.டி.எம்மில் கொள்ளை அடித்து இதே கும்பல் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள காவல் நிலையத்தில் இவர்களின் கைரேகை பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளை அடித்ததும் கடந்த வாரம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் கொள்ளை அடித்ததும் இந்த கும்பல் தான் எனக் கூறப்படுகிறது.
கேரளா போலீசார் இந்த கும்பலிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், ஆந்திர மாநில போலீசாரும் விரைந்து வந்து விசாரித்துள்ளனர். அண்மையில் கடப்பாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர். ஒடிசாவில் இருந்தும் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்த தமிழகத்திற்கு வரவுள்ளனர். நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த மேவாட் கும்பல் கைவரிசை காட்டியுள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications