ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம்.. ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு.. தப்பிக்க என்னென்ன வழிகள்
சென்னை: வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்களில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதாவது உங்கள் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கவே 23 ரூபாய் கட்டணம் வசூலிக்க உள்ளார்கள். தப்பிக்க சில வழிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கு ஆகும் கட்டண விதிமுறைகளை மாற்றி இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இந்த நடைமுறை மே 1ம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி வங்கியில் பணம் போட்டு சேமிப்பவர்கள், மாதம் மாதம் அக்கவுண்ட் மூலம் சம்பளம் வாங்குவோர் (அப்படித்தான் சம்பளம் கிடைக்கிறது), தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்களில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்க முடியும்.

கிராமங்களில் எப்படி
அதேபோல் பிற வங்கிகளின் ஏடிஎம் அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்களில் இருந்து நகரங்களில் ஒரு மாதத்திற்கு மூன்று முறை எடுக்க முடியும். அதேநேரம் கிராமங்களில் ஏடிஎம் வசதிகள் பெரிய அளவில் இருக்காது என்பதால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பிற வங்கி ஏடிஎம்களில் ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துகொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் விதிக்கப்படுகிறது.
23 ரூபாய் கட்டணம்
இந்த கட்டண முறை புதிது இல்லை என்றாலும், முன்பை விட பிடித்தம் செய்யப்பட உள்ள தொகை அதிகம். அதாவது ஏப்ரல் 30ம் தேதி வரை இந்தக் கட்டணம் ரூ.21 வரை வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
கட்டணம் ஏன்
நம்முடைய பணத்தை வங்கியில் எடுக்க சேவைக்கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் வசூலிக்கின்றன. ஏடிஎம் அமைப்பது, அதற்கு ஏசி போடுவது, ஏடிஎம் வாடகை, ஏடிஎம்களுக்கு காவலாளியை நியமிப்பது போன்ற பல்வேறு சேவைகள் செய்வதால் பணத்தை எடுக்க கட்டணம் வசூலித்தே ஆக வேண்டும் என்று வங்கிகள் இருக்கின்றன. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும்போது, அதற்கான சேவைக் கட்டணம் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம்களில் கட்டணம்
தற்போதைய நிலையில் வங்கியில் பணம் எடுப்பதற்கு பதில் ஜிபே, போன்பே , பேடிஎம், அமோசன் பே உள்ளிட்ட யுபிஐ ஆப்களை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தலாம். 50000 சம்பளம் வாங்குவோர் அதிக பட்சம் ஐந்து முறை எடுக்கலாம் என்பதால், இலவமாக ஐந்து முறைக்குள் மொத்த பணத்தை எடுத்துவிட முடியும். பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிய ஏடிஎம் கார்டை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேங்கிங் அல்லது ஜிபே மூலம் அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏடிஎம்மில் பேலன்ஸ் செக் பண்ணினாலே கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
காசோலை பயன்படுத்தலாம்
அதேபோல் நிறைய சம்பளம் வாங்குவோர், வேறு வேறு வங்கி கணக்குகள் இருந்தால் அந்த கணக்கிற்கு சம்பளத்தை பிரித்து அனுப்பிவிடுங்கள். உங்களிடம் மூன்று வங்கி கணக்கு உள்ளது என்றால், மூன்றுக்கும் பணததை அனுப்பலாம். அந்த ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். இதன் மூலம் பரிவர்த்தனை கட்டணங்களை தடுக்க முடியும். லட்சக்கணக்கில் பணம் வந்துள்ளது. ஒரே நேரத்தில் எடுத்தே ஆக வேண்டும் என்றால், காசோலையை பயன்படுத்தி வங்கியிலேயே சென்று பணம் எடுக்கலாம்.
ஐஎம்பிஎஸ்
அவசர தேவைக்கு வங்கியில் பணம் இருக்க வேண்டும் என்பதால் அந்த கட்டணத்தை பராமரிக்க வேண்டும். அதேபோல் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் கட்டணம் எடுப்பார்கள் என்பதால், அதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றவும் வங்கிகள் கட்டணம் வசூலிப்பதால் neft முறையில் பணத்தை மாற்றுங்கள், imps முறையில் மாற்றினால் பல வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. எனவே அந்த முறையில் அவசரம் என்றால் மட்டும் பணம் அனுப்புங்கள். பணத்தை சம்பாதிப்பது மட்டுமல்ல பணத்தை பாதுகாப்பதும் இப்போது கலையாக மாறிவிட்டது என்பது எதார்த்தமான உண்மை
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications