நாடாளுமன்ற தாக்குதல்.. இந்திய இறையாண்மைக்கு சவால்.. கடும் நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2001 டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆயுதங்கள் உடன் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலரும் வீர மரணம் அடைந்தனர். இதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் அதே போல ஒரு சம்பவம் நாடாளுமன்றத்திற்குள் நடந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள லோக்சபாவில் இன்று அவை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் இருந்து இரண்டு பேர் குதித்து எம்.பிக்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் மீது தாவி சென்றனர். அனைவரும் பதற்றமடைந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே மஞ்சள் நிற வண்ணங்களை உமிழும் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
அவர்களை எம்.பிக்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் போலீசார் வந்து கைது செய்து அழைத்து சென்றனர். இதுவரை இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications